Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோவா அல்லது பெங்களூரு!! எந்த அணி முதலிடத்தைப் பிடிக்கப் போகிறது?

கோவா : கடந்த சீசனில் ரன்னர்-அப் அணியான பெங்களூருவை கோவா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நாளை நடைபெறவுள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா அணி வீழ்த்துமா?

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவா அணி 7 போட்டிகளில் விளையாடி இது வரை 16 புள்ளிகளைப் பெற்று உள்ளது. கோவா அணி, பெங்களூரு அணியை நாளை எதிர்கொள்ள வேண்டும். இந்த இரண்டு அணிகளும் மிகத் திறமையான அணிகள் என்பதால் ஒன்றை ஒன்று மிரட்டும் வகையில் உள்ளது.

ISL 2018 - Goa FC vs Bengaluru FC match preview

ஃபெரான் கொராமினாஸ் மற்றும் எடு பேடியா ஆகியோர் கோவா அணியிலும், மிக்கு மற்றும் சுனில் ஆகியோர் பெங்களூரு அணியிலும் கொடி கட்டிப் பறக்கிறார்கள். ஹீகோ பௌமஸ் மற்றும் எடு பேடியா ஆகியோர் கோவா அணியில் தடுத்தாடும் திறமை பெற்றவர்கள். அதே நேரத்தில் கோராமினாஸ் அந்த அணியின் வெற்றியை உறுதி செய்யும் நபராக இருக்கிறார்.

ISL 2018 - Goa FC vs Bengaluru FC match preview

இது குறித்து கருத்து தெரிவித்த கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபெரா, இந்த லீக் போட்டிகளில் ஒரு மிகச் சிறந்த அணியை எதிர்த்து விளையாடப் போகிறோம். நாளை ஆட்டம் எங்களுக்கு ஒரு சவால் மிகுந்தது. இந்த போட்டியின் முடிவு எப்படியிருக்கும்? என்பதை முடிவு செய்யப் போகும் ஆட்டமாக நாளைய விளையாட்டு இருக்கும். அதே நேரத்தில் எங்கள் அணி 3 கோல்களை அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்தார்.

ISL 2018 - Goa FC vs Bengaluru FC match preview

சர்வதேச போட்டிகளின்போது காயமடைந்த சுனில் தற்போது விளையாடுவதற்கு முழு தகுதியைப் பெற்றுள்ளார். இது பெங்களூரு அணிக்கு கூடுதல் பலம் ஆகும். சுனில் ஷட்டரி 4 கோல்களை அடித்துள்ளார். அதே போல் அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் மிக்கு மீதும் அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

சுனில் கடந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக பயிற்சி பெற்று ஃபார்மில் உள்ளதால் அவர் நாளைய போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என பெங்களூரு பயிற்சியாளர் கார்லெஸ் கட்ரெட் தெரிவித்தார்.

ISL 2018 - Goa FC vs Bengaluru FC match preview

இந்த ஐஎஸ்எல் சீசனில் சுனில் ஷட்டரியும், கொராமினாசும்தான் அதிக புள்ளிகளைப் பெறுவார்கள் என்ற நிலை உள்ளது. புள்ளிகளுக்கான அட்டவணையில் ஹீயும் 28 கோல்களும், ஷட்டரி 25 கோல்களும், கொராமினாஸ் 26 கோல்களும் பெற்று இடம் பிடித்துள்ளனர்.

கோவா அணி மிகச் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளதால், நாளை ஆட்டத்தில் அவர்கள் ஜொலிப்பார்கள் என தெரிவித்த கார்லெஸ் கட்ரெட், எங்கள் அணியும் நன்றாக விளையாடும் என்பதால் ரசிகர்களுக்கு அது பெரிய விருந்தாக அமையும் என்றார்.

ISL 2018 - Goa FC vs Bengaluru FC match preview

பெங்களூர அணி நிச்சயமாக ஒரு சிறந்த ஆட்டத்தை கொடுக்கும் அதே நேரத்தில் கோவா அணி கடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளது. கோவா அணி ஒரு சிறந்த அணி என்பதை செர்ஜியோ லோபெரா நிரூபித்துக் காட்டியுள்ளார்,

கடந்த முறை இந்த இரு அணிகளும் கோவாவில் விளையாடியபோது 7 கோல்கள் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தின. அதே திருவிழா நாளையும் தொடருமா?

(Photos Courtesy - ISL)

Story first published: Wednesday, November 21, 2018, 19:12 [IST]
Other articles published on Nov 21, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+