Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோவா அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா டெல்லி டைனமோஸ்?

கோவா : கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் அக்டோபர் 8 அன்று நடைபெற உள்ள ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் டெல்லி டைனமோஸ் அணியை எதிர்கொள்கிறது கோவா அணி

இந்த சீசன் தொடக்கத்தில் ஜாம்ஷெட்பூர் அணியுடன் விளையாடும்போது கோவா அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது. தனது மோசமான செயல்பாடுகளும், பயிற்சியும்தான் இந்த தோல்விக்கு காரணம் என்பதை கோவா அணியின் பயிற்சியாளர் லோபெரா ஒப்புக் கொண்டுள்ளார். எனது பயிற்சியில் இது மோசமான தோல்வி என்றும், நாங்கள் கடுமையாக உழைத்து எங்களை பலப்படுத்திக் கொள்வோம் என்றும், அதே நேரத்தில் சொந்த மண்ணில் கோவா ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் எங்கள் அணியினர் 100 சதவீத திறமையை வெளிப்படுத்தி விளையாடுவோம் என்றும் லோபெரா தெரிவித்துள்ளார்.

ISL 2018 - Goa FC vs Delhi Dynamos FC match preview

கோவா அணியைப் பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் ஒரு ஆட்டத்தில் சஸ்பெண்டு பண்ணப்பட்டிருந்த ஃபெரான் கொராமினால் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவரது ஆட்டம் நிச்சயம் ஆறு கோல்கள் அடிக்கவும், அதற்கு உதவி செய்யும் வகையிலும் இருக்கும் என்றும் லோபெரா தெரிவித்துள்ளார்.

இதே போல் பிராண்டன் பெர்னாண்டஸ் முழு உடற்தகுதியுடன் அணிக்கு திரும்பி வருவதால் பயிற்சியாளர் சில மாற்றங்களை செய்யவும் தீர்மானித்துள்ளார்.

டெல்லி டைனமோஸ் அணியைப் பொறுத்தவரை ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் 15 நிமிடங்களில் அவர்கள் ஆடிய ஆட்டத்தால் அதன் பயிற்சியாளர் ஜோசப் கோம்பவு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

ISL 2018 - Goa FC vs Delhi Dynamos FC match preview

டெல்லி அணியின் பயிற்சியாளர் ஜோஸப் கோம்பவு கூறுகையில், கோவா அணிக்கு எதிராக விளையாடும்போது சில புதிய அணுகுமுறைகளை கையாள வேண்டும். ஏனென்றால் கோவா - மும்பை சிட்டி இடையே நடைபெற்ற போட்டியின்போது 5 கோல்களை அடித்து கோவா அணி அசத்தியது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு எங்கள் ஆட்டம் சிறப்பானதாக இருக்கும்.

ISL 2018 - Goa FC vs Delhi Dynamos FC match preview

நாங்கள் போராடி வெற்றி பெற்று முதல் நான்கு இடத்துக்குள் வர முயற்சி செய்வோம். தற்போது எங்களுக்கு 6 புள்ளிகள் இடைவெளி உள்ளது. அதை 2 விளையாட்டுகளில் நாங்கள் நிரப்ப வேண்டும் இந்த சீசனின் 7 ஆட்டங்களில் எங்கள் வீரர்கள் பெஸ்ட் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் எட்டாவது ஆட்டத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு கைகொடுக்கும் கோவா அணியைப் பின்னுக்குத் தள்ளி டெல்லி அணி முன்னேறும் என்று ஜோசப் கோம்பவு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

(Photos Courtesy - ISL)

Story first published: Thursday, November 8, 2018, 9:51 [IST]
Other articles published on Nov 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+