For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவாவின் தடுப்பாட்டத்தை தாண்டி வெற்றியை ருசிக்குமா கேரளா பிளாஸ்டர்ஸ் அணி?

கொச்சி : தோல்விகளால் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி நாளை கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

கேரள அணியின் மஞ்சள் படை வீரர்கள் இது வரை ஆறுபோட்டிகளில் விளையாடி ஏடிகே அணிக்கு எதிராக ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். நான்கு போட்டிகள் டிராவிலும், பெங்களூருக்கு எதிராக ஒரு போட்டி தோல்வியிலும் முடிவடைந்துள்ளது.

ISL 2018 - Goa FC vs Kerala Blasters FC match preview

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரளா அணியின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ், நாளை நடைபெறவுள்ள போட்டியில் கோவா அணிக்கு எதிராக அதிக கோல்களை அடித்துவெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் உள்ளதாக தெரிவித்தார்.

ISL 2018 - Goa FC vs Kerala Blasters FC match preview

கோவா அணியைப் பொறுத்தவரை அவர்கள் குழுவாக ஒன்றிணைந்து விளையாடுவார்கள். அதே போல் வெற்றியும் பெறுவார்கள். அதைப் போல நாங்களும் நாளை வெற்றி பெறுவோம் என்கிறார் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் தங்பாய் சின்ட்கோ.

ISL 2018 - Goa FC vs Kerala Blasters FC match preview

இது குறித்து கருத்து தெரிவித்த தங்பாய் சின்ட்கோ , கோவா அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபெரா அந்த வீரார்களுக்கு ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது நீங்கள் உங்களை உணர்ந்து விளையாட வேண்டும் என்பதுதான். அதனால்தான் அவர்கள் 6 ஆட்டங்களில் 18 கோல்களை அடித்துள்ளனர். அதே போன்று நாளை விளையாடி வெற்றி பெறுபோம் என அவர் தெரிவித்தார்.

ISL 2018 - Goa FC vs Kerala Blasters FC match preview

தடுப்பாட்ட முறையை நாங்கள் கடைப்பிடித்தாலும் அதில் நிறைய ரிஸ்க் இருக்கிறது. கால்பந்தில் அது ஒரு சிறந்த முறை. அதே முறையை தாங்களும் கடைப்பிடிக்கப் போவதாக கேரள அணியின் துணை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் அவர்களை விட நாங்கள் கூடுதலாக கோல் அடிப்போம் என்பது உறுதி என்கிறார் கோவா அணியின் தலைமைப் பயிற்சியாளர்.

டெல்லி டைனமோசுக்கு எதிராக கடந்த போட்டியில் ஃபெரான் கொரானாஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஏற்கனவே அவர் 6 கோல்களை அடித்துள்ளார். தொடர்ந்து நாளை அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பாக்கிறோம்.

ISL 2018 - Goa FC vs Kerala Blasters FC match preview

இதே போல் எடு பேடியாவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரைக் குறித்து கேரள அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரானாஸ் மட்டுமல்ல எடு பேடியா மற்றும் போமஸ் ஆகியோரும் மிகச்சிறந்த வீரர்கள்தான் என்கிறார் கேரளா அணியின் துணைப் பயிற்சியாளர் தங்பாய் சின்ட்கோ.

இதில் கோவா அணியின் பயிற்சியாளர் லோபேராவுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் பிரான்டன் பெர்ணான்டஸ் நல்ல உடல் தகுதியுடன் உள்ளார். கடந்த போட்டிகளைக் காட்டிலும நாளை அவர் சிறப்பாக விளையாடுவார்.

கோவா அணி நாளை தனது தடுப்பாட்டத்தைத் தொடருமா ? கேரளா அணி தனது சொந்த மண்ணில் வெற்றி பெறுமா ? நாளை தெரியும்.

(Photos Courtesy - ISL)

Story first published: Saturday, November 10, 2018, 19:33 [IST]
Other articles published on Nov 10, 2018
English summary
ISL 2018 - Goa FC vs Kerala Blasters FC match preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+