Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி!!

கொச்சி : கொச்சியில் இன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கோவா அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 34 ஆவது கால்பந்து போட்டி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும் எஃப்சி கோவா அணிக்கும் இடையே இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற கேரளா அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - Goa FC vs Kerala Blasters FC match result

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணியினரும் விறுவிறுப்பாக விளையாடினர். ஆட்டத்தின் 11 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் நட்சத்திர வீரர் ஃபெரான் கொராமினாஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 31 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சந்தேசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 34 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மொகமது அலிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் கோவா அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நழுவிப் போனது.

ISL 2018 - Goa FC vs Kerala Blasters FC match result

44 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது. 45 ஆவது நிமிடத்தில் கேரளா அணிக்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதுவும் நழுவிப்போனது.

இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த நிமிடங்களில் கோவா அணியின் ஃபெரான் கொராமினாஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்தில் கோவா அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ISL 2018 - Goa FC vs Kerala Blasters FC match result

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய பின் 51 ஆவது கோவா அணியின் எடுபேடியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 57 மற்று 62 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து ஆட்டத்தின் 67 அவது நிமிடத்தில் கோவா வீரர் மன்வீர்சிங் மூன்றாவது கோலை அடித்தார். 71 ஆவது நிமிடத்தில் கேரளா அணியிலும், 76 ஆவது நிமிடத்தில் கோவா அணியிலும் வீரர்கள் மாற்றப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 81 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஹீகோ போமசுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

ISL 2018 - Goa FC vs Kerala Blasters FC match result

ஆட்டத்தின் இறுதியில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் நிகோலா அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து கோவா அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Sunday, November 11, 2018, 22:24 [IST]
Other articles published on Nov 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+