Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வெற்றி பெற்ற ஏடிகே.. வெற்றியே பெறாத ஜாம்ஷெட்பூர்.. யாருக்கு வெற்றி கிடைக்கும்?

ஜாம்ஷெட்பூர் : தங்கள் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பல் தலைமையில் ஆடி வரும் ஏடிகே அணியை ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப் சி அணி எதிர்த்து விளையாட இருக்கிறது.

ஜாம்ஷெட்பூரில் இந்த போட்டி நாளை அக்டோபர் 21 அன்று நடைபெற உள்ளது.

கோப்பல் தலைமையின் கீழ் ஆடிய இரும்பு வீரர்கள் ஒன்பது போட்டிகளில் விளையாடி அதில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

கோப்பல் என்ன சொல்கிறார்?

கோப்பல் என்ன சொல்கிறார்?

இது குறித்து கருத்து தெரிவித்த பயிற்சியாளர் கோப்பல் "கடந்த சீசனில் நாங்கள் என்ன செய்தோம் என்பதில் பெருமை அடைகிறோம். அதில் எங்களின் ஆட்டம் நன்றாகவே இருந்தது. நாளைய போட்டியை நான் எதிர்பார்த்து இருக்கிறேன். ஜாம்ஷெட்பூர் அணியும் வெற்றிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

வெற்றி பெறாத அணி

வெற்றி பெறாத அணி

தற்போதைய பயிற்சியாளர் சீசர் ஃபெராண்டோ தலைமையில், ஜாம்ஷெட்பூர். மும்பை சிட்டி அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. பின்னர் பெங்களூரு எஃப்.சி. அணிக்கு எதிராக 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது.

சீசர் ஃபெராண்டோ நம்பிக்கை

சீசர் ஃபெராண்டோ நம்பிக்கை

"ஏடிகே அணி ஒரு மிக நல்ல டீம். முதல் ஆட்டத்தில் இருந்தே அவர்களது பயிற்சியாளரின் சிறப்பான பயிற்சியால் அவர்கள் தங்களை முன்னேற்றிக் கொண்டனர். ஏடிகே அணியின் ஆட்டம் எனக்கு முக்கியமான ஒன்று. நாங்கள் எங்களால் முடிந்த அளவு மிக நன்றாக விளையாட முயற்சி செய்வோம். நாளைய ஆட்டத்தில் நிச்சயம் எங்கள் அணி வெற்றி பெறும்" என்கிறார் சீசர் ஃபெராண்டோ.

ஜாம்ஷெட்பூர் அணியில் சிறந்த வீரர்கள்

ஜாம்ஷெட்பூர் அணியில் சிறந்த வீரர்கள்

ஜாம்ஷெட்பூர் அணி வீரர்களும் மிகச் சிறந்த வீரர்களே. மரியோ ஆர்க்கஸ் ஏற்கனவே கடந்த சீசனில் மிகச் சிறப்பாக விளையாடி ஜொலித்தார். செர்ஜியோ சிடொன்கா மற்றும் பப்லோ மோர்கோவா ஆகியோர் கடந்த சீசனில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். உண்மையில், ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. அணி இந்த சீசனில் மிக அதிகமான கோல்களை (4) அடித்துள்ளனர். அதே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வீரர்களும் அறிமுகமானார்கள் . அவர்களும் சிறப்பாக விளையாடி கோல் அடித்திருக்கிறார்கள்.

நம்பிக்கை தான் காரணம்

நம்பிக்கை தான் காரணம்

கோப்பல் தலைமையிலான அணி வலுவாக இருக்கும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், ஜான் ஜான்சன் மற்றும் கெர்சன் வியீரா போன் வீரர்கள் முதல் மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு ஜொலிக்கவில்லை. ஆனாலும் நம்பிக்கைதான் டெல்லி டைனமோஸுக்கு எதிராக வெற்றி பெற உதவியது. பல்வந்த் சிங் மற்றும் நௌசர் ஆகியோர் கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டதால் ஏடிகே அணிக்கு வெற்றி கிடைத்தது. அதே நேரத்தில் மானுவல் லான்சோட்டின் விளையாட்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. மேலும் கலு உசேவும் இந்த வெற்றிக்கு உதவினார்.

ஏடிகே அணி மீண்டும் வெல்லுமா?

ஏடிகே அணி மீண்டும் வெல்லுமா?

தற்போது ஏடிகே அணி விரைவான எதிர்-தாக்குதல்களை நடத்த தயாராக உள்ளது. ஆனால் ஃபெரண்டோவின் ஆட்களுக்கு எதிராக விளையாடுவது ஒரு அச்சுறுத்தலைத் தரும். ஆனாலும் நாளை என்ன நடக்கும் என்பதை ரசிகர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகிறார்கள்.

Story first published: Saturday, October 20, 2018, 19:26 [IST]
Other articles published on Oct 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+