For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மோசமான இடத்தில் இருக்கும் சென்னை மச்சான்ஸ்.. ஏதாவது பண்ணுங்க பாஸ்!!

ஜாம்ஷெட்பூர் : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி தொடர்ந்து தோல்வியால் சறுக்கி வருவதை தடுக்கும் வகையில் நாளை ஜாம்ஷெட்பூர் ஜேஆர்டி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்சில், சென்னையின் எஃப்சி அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்த அணி வெற்றி அட்டவணையில் முதல் பாதி இடத்தைப் பிடித்திருந்தாலும், எட்டு ஆட்டங்களில் ஆடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஜாம்ஷெட்பூர் அணி ஐந்து போட்டிகளில் சமன் செய்ததை பயிற்சியாளர் சீசர் ஃபெர்ரண்டோ, மனப்பூர்வமாக ஒத்துக் கொண்டாலும் இன்னும் அந்த அணி சிறப்பாக செய்திருக்க வேண்டும் என்கிறார்.

ISL 2018 - Jamshedpur FC vs Chennayin FC match preview

இந்த சீசனில் மூன்று கோல்களை அடித்த செர்ஜியோ சிடொன்கா, முழங்காலில் காயம் அடைந்தார். இதையடுத்து ஃபெராண்டோ தனது அணியில் ஏற்பட்டுள்ள சறுக்கலை உணர்ந்துள்ளார்.

ISL 2018 - Jamshedpur FC vs Chennayin FC match preview

செர்ஜியோ காயமடைந்துள்ளதால் வரும் ஜனவரி மாதம் வரை அவரால் விளையாட முடியாது. செர்ஜியோ மிகச் சிறந்த வீரர் என்றாலும் அவரால் விளையாட முடியாது என்பது எங்களது அணிக்கு பெரிய இழப்பு என்கிறார் பயிற்சியாளர் ஃபெராண்டோ.

ISL 2018 - Jamshedpur FC vs Chennayin FC match preview

எஃப்சி புனே அணிக்கு எதிராக ஆட்டத்தில் சுமீத் பாஸி 334 நிமிடங்களில் 2 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். நாளை ஜாம்ஷெட்பூர் அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு பலமே.

ISL 2018 - Jamshedpur FC vs Chennayin FC match preview

இதனிடையே சென்னையின் எஃப் சி அணி நிறைய புள்ளிகளை எடுக்க வேண்டியுள்ளது. தற்போது அந்த அணி அட்டவணையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அவர்கள் ஏழு போட்டிகளில் 4 புள்ளிகளையாவது எடுக்க வேண்டும்.

ISL 2018 - Jamshedpur FC vs Chennayin FC match preview

மெய்சன் ஆல்வேஸ் புனேக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடியதாக கூறும் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி, மிசோரம் ஸ்ட்ரைக்கர் ஜெஜே லால்பேகுவாவா இன்னும் தனது கணக்கை தொடங்வில்லை என்கிறார்.

அன்ரூத் தாபா மற்றும் ஜேர்மன் பிரீத் சிங் ஆகியோர் ஜோர்டானுக்கு எதிராக இந்தியாவுக்காக கடினமாக உழைத்தனர், இவர்கள் இருவரும் சென்னை அணிக்கு ஆறுதலாக இருப்பார்கள்.

ஜாம்ஷெட்பூர் அணியின் மரியோ ஆர்க்கஸ் மற்றும் மெமோவிற்கு எதிராக இவர்கள் இருவரும் மிட்ஃபீல்டு ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். பிரான்சிஸ் பெர்னாண்டஸ் இடது புறம் இருந்து விளையாடி சென்னை அணிக்கு பக்கபலமாக இருப்பார்.ஜாம்ஷெட்பூர் அணியினர் எங்களை விட வலுவானவர்கள் என நாங்கள் நினைக்கவில்லை. அதே நேரத்தில் அந்த அணியை எளிதாகவும் எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார் சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி.

புனேயில் தோல்வியுற்ற பின்னர் தனது வீரர்களிடமிருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை ஃபிரான்டோ விரும்புவார். அதே நேரத்தில் புனேயில் வெற்றி பெற ஜான் கிரிகோரியும் ஆர்வமாக இருப்பார். ஜாம்ஷெட்பூரில் நாளை ஒரு புதிரான போர் காத்திருக்கிறது

(Photos Courtesy - ISL)

Story first published: Saturday, November 24, 2018, 19:36 [IST]
Other articles published on Nov 24, 2018
English summary
ISL 2018 - Jamshedpur FC vs Chennayin FC match preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+