Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐஎஸ்எல் 2018-19 : டெல்லி அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி அசத்தல் வெற்றி!!

ஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூரில் டிசம்பர் 12 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்திஅபார வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 55 ஆவது கால்பந்து போட்டி ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் ஸ்டேடியத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும் டெல்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - Jamshedpur FC vs Delhi Dynamos FC complete match result

ஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ராணேவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 14 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ஆட்ரியா வெளியேற்றப்பட்டு மார்டி களம் இறக்கப்பட்டார்.

ISL 2018 - Jamshedpur FC vs Delhi Dynamos FC complete match result

ஆட்டத்தின் 24 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் லாலின்சுலா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 29 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் டிம் காஹில் ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் நாராயண் தாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 43 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் ஜியானிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முதல் பாதியின் முடிவில் கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

ISL 2018 - Jamshedpur FC vs Delhi Dynamos FC complete match result

அந்த 2 நிமிடத்திலும் இரு அணிகளும் கோல்கள் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஜாம்ஷெட்பூர் - டெல்லி என இரு அணிகளும் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. 45 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 61 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் ஃபாருக் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2018 - Jamshedpur FC vs Delhi Dynamos FC complete match result

67 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஃபாரூக் வெளியேற்றப்பட்டு ஜெர்ரி களமிறக்கப்பட்டார். 70 ஆவது நிமிடத்தில் டெல்லி டைனமோஸ் அணியின் ஆட்ரியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டத்தின் 73 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் டிம் காஹில் வெளியேற்றப்பட்டு சுமித் பாஸிசி களம் இறக்கப்பட்டார். 77 ஆவது நிமிடத்தில் டெல்லி அணியின் நாராயண் தாஸ் வெளியேற்றப்பட்டு டேனியல் களம் இறக்கப்பட்டார்.

இரண்டாம் பாதியின் முடிவில் கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த மூன்று நிமிடங்களிலும் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து ஜாம்ஷெட்பூர் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Thursday, December 13, 2018, 12:18 [IST]
Other articles published on Dec 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+