ஐஎஸ்எல் 2018-19 : டெல்லி டைனமோஸ் கிட்ட எச்சரிக்கையா இருக்கணும்.. ஜாம்ஷெட்பூர் அணி உஷார்!!
ஜாம்ஷெட்பூர் : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து 2018 - 19 போட்டிகளில் 7 டிராக்கள் மற்றும் 3 வெற்றிகளுடன் ஜாம்ஷெட்பூர் அணி உள்ளது.
அட்டவணையில் இறுதி இடத்தில் உள்ள டெல்லி டைனமோஸ் அணியுடன் 4 ஆவது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் அணி மோதுகிறது.

ஆனாலும், ஜாம்ஷெட்பூர் அணி சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த நவம்பர் மாதத்தில் இரு அணிகளும் விளையாடி 2 - 2 என்ற கோல் கணக்கில் சம அளவில் போட்டியை முடித்தனர். தற்போது சீசர் ஃபெர்ரண்டோவின் ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் பாதிக்கப்பட்ட அந்த வீரர்களிடம் தோற்பதை விரும்பவில்லை.
குறிப்பாக டெல்லி அணியினர் பிளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும் நிலையில் உள்ளதால் அவர்களல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பாக ஆடுவதற்கு தயாராக உள்ளனர்.
இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெளியூர்களில் சென்று அவர்கள் ஆடிய இரண்டு ஆட்டங்களில், கேரளாவுடன் ஆடும்போது தொடர்ந்து பெனால்ட்டி பெற்றனர்.
மீதி உள்ள ஆட்டங்களில் தாங்கள் இழந்தவற்றை மீண்டும் பெற வேண்டும் என்ற துடிப்புடன் இந்த போட்டியில் களம் இறங்க உள்ளனர்.

இந்த சீசனில் ஜாம்ஷெட்பூர் அணி செல்வாக்குடன் இருந்தாலும், கோவா அணிக்கு எதிராக அவர்கள் ஆடும்போது இறுதி நேரத்தில் தான் கோல் அடித்து 19 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜாம்ஷெட்பூர் அணியின் துணைப் பயிற்சியாளர் குலர்மோ ஃபெர்ணாண்டஸ் , டெல்லி அணியினர் சிறப்பாக விளையாடுகின்றனர். அவர்கள் தடுப்பாட்டத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கின்றனர். அதனால் நாங்களும் திறமையாக விளையாடுவோம் என்றார்.
காயம் காரணமாக மைக்கேல் சூசைராஜ் கடந்த ஆட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரர் செர்கியோ சிடோன்ச்சா அதை சமாளிப்பார் என்கிறார் குலர்மோ ஃபெர்ணாண்டஸ்.
நாங்கள் காயங்கள் காரணமாக ஒரு சிலரை குறிப்பாக செர்ஜியோவை இழந்தது (சிடொக்சா) ஒரு பெரிய அடியாகும். ஆனாலும் நாங்கள் எந்தவிதமான மன்னிப்பும் கேட்காமல் கடுமையாக விளையாடுவோம்.
ஸ்டார் விளையாட்டு வீரர் டிம் காஹில், கார்லஸ் கால்வோ மற்றும் பப்லோ மோர்கோடோ ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, டெல்லி அணியை வீழ்த்த நாங்கள் அந்த அணி மீது ஒரு கண் வைத்திருக்கிறோம்.
சுமித் பாசி, இரண்டு கோல்களை அடித்து பலமாக இருக்கிறார். சென்ற ஆட்டத்தில் அவர் ஓய்வு எடுத்திருந்த நிலையில் நாளை அவர் களம் இறங்குகிறார். டெல்லி டைனமோஸ் அணியினர் இந்த சீசனில் மிகக் குறைந்த புள்ளிகளையே பெற்றுள்ளனர். மேலும் புள்ளி பட்டியலில் கடைசியில் உள்ளனர்,
வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் நாங்கள் இருக்கிறோம். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நாங்கள் விளையாட தயாராகி விட்டோம் என்கிறார் டெல்லி தலைமை பயிற்சியாளர் ஜோசப் கோம்போவ். மேலும் அவர் கூறும்போது நாங்கள் இளம் வீரர்களை ஊக்குவிக்கிறோம். எனவே எங்கள் அணி வீரர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர் காலம் இருக்கிறது என்றார்.
(Photos Courtesy - ISL)


Click it and Unblock the Notifications