Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோவா அணியின் திட்டம் ஜாம்ஷெட்பூரை வீழ்த்துமா.. ஐஎஸ்எல் லீக் போட்டி முன்னோட்டம்

ஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூர், கோவா அணிகள் மோதும் லீக் போட்டி நாளை நடைபெற உள்ளது. கோவா அணியின் பயிற்சியாளர் செர்கியோ லோபெரா இந்த போட்டியை எதிர்கொள்ள கடுமையாக திட்டமிட்டு வருகிறார்.

எஃப்ஸி கோவா அணிக்கு ஜாம்ஷெட்பூர் அணி கடும் சவாலாக இருக்கும். கடந்தாண்டு ஐஎஸ்எல்லில் கடைசி லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி எஃப்ஸி கோவா பிளே ஆஃப் க்கு முன்னேறியிருந்தது. ஆனால் பயிற்சியாளர் செர்கியோ லோபெரா அதை விட கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளார்

ISL 2018 - Jamshedpur FC vs Goa FC league match preview and analysis

பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யுக்தியில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பவர் லோபெரா. இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர தாக்குதல் வீரரான ஃபெர்ரன் கொரோமினாஸ் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதும் ராஞ்சியில் தங்க நேரிட்டதன் களைப்பும் லோபெராவுக்கு இரு மடங்கு சவாலாகவே இருக்கும்.

கோவாவுக்காக கொரோமினஸ் 24 கோல்கள் அடித்துள்ளார். ரெட்கார்டு பெற்று அவர் வெளியேறியது கோவாவுக்கு பேரிழப்பு. ஆனால் தமது அணி, தனி நபர்களை விட ஒட்டுமொத்த வீரர்களையே சார்ந்து இயங்குவதாக கூறுகிறார் பயிற்சியாளர்.

தாக்குதல் பாணியை விரும்பும் லோபெராவின் ஆட்ட யுக்தி பலருக்கும் பிடித்துள்ளது. கடந்தாண்டு பிளே ஆஃபில் சென்னையின் அணியிடம் கோவா தோற்றது. தற்போது அவர்கள் 3 தொடர் வெற்றிகளை பெற்றுள்ளனர். முதல் போட்டியில் நார்த் ஈஸ்ட்டிடம் டிரா செய்தனர். கடந்த சீசனில் 18 போட்டிகளில் 42 கோல் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர் கோவா வீரர்கள். இதில் பெரும்பாலானவற்றை கொரோமினாசும் லான்சரோட்டும் அடித்தனர்.

இந்நிலையில் தற்போது லான்சரோட் ஏடிகேவுக்கு மாறியது கோவாவுக்கான இழப்பாக மாறியுள்ளது. லான்சரோட் இல்லாததால் அணியை பயிற்சியாளர் சிறிது மாற்றி அமைத்துள்ளார். விங்கர் மண்டார் ராவ் தேசாய் ஃபுல் பேக் ஆக மாற்றப்பட்டுள்ளார். எடு பெடுயா இன்வெர்ட்டட் விங்கராக மாற்றப்பட்டுள்ளார். ஆனால் லான்சரோட்டுக்கு மாற்று என கருதப்பட்ட மிகுல் பலான்கா இதுவரை 44 நிமிடங்கள் மட்டுமே ஆடியுள்ளார்.

தற்போது பலான்காவுக்கு திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. மும்பை சிட்டிக்கு எதிராக இவர் 2 கோல் அடித்திருந்தார். இதே போன்ற ஆட்டத்தை இவர் வெளிப்படுத்தினால் அது பிற வீரர்களை மிகவும் சார்ந்திருப்பதை குறைக்க உதவும். ஜாம்ஷெட்பூருக்கு எதிரான போட்டி, லோபெராவுக்கும் எஃப்ஸி கோவாவுக்கும் மிகப்பெரிய சோதனை என்றால் அது மிகையில்லை.

Story first published: Wednesday, October 31, 2018, 14:24 [IST]
Other articles published on Oct 31, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+