Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளே ஆஃப் சுற்றுக்கு போகணுமே!! போட்டி போடும் ஜாம்ஷெட்பூர் - நார்த் ஈஸ்ட் அணிகள்

ஜாம்ஷெட்பூர் : மற்ற இடங்களில் தோற்காத ஜாம்ஷெட்பூர் அணி தங்களது சொந்த மண்ணில் தொடர்ந்து தோற்று வருவதால் இன்று நடக்கும் போட்டியில் எப்படியாவது வெற்றியைக் கைப்பற்ற வேண்டும் எனற மன வலிமை கொண்டுள்ளது.

ஜாம்ஷெட்பூர் ஜேஆர்டி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி, நார்த் ஈஸ்ட் அணியை எதிர்த்து நேருக்கு நேர் களம் காண்கிறது.

ISL 2018 - Jamshedpur FC vs North East united FC match no. 45 preview

வெற்றிப்புள்ளி அட்டவணையில் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ள ஜாம்ஷெட்பூர் அணி தடுப்பாட்டததில் இரண்டாவது சிறந்த அணியாக கருதப்படுகிறது.

நார்த் ஈஸ்ட்அணியை விட அதிக புள்ளிகள் பெற்று பெங்களூரு அணி முன்னிலையில் இருப்பதால், இதை முறியடிக்க அந்த அணி முயற்சி செய்கிறது. இது ஆட்டத்தில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

அதே நேரத்தில் இந்த போட்டி இரு பெரும் பயிற்சியாளர்களான சீசர் ஃபெராண்டோ மற்றும் எல்கோ ஷாட்டோரி இடையேயான ஈகோ யுத்தமாகவும் பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷட்டோரி, ஜாம்ஷெட்பூர் அணி தனது சொந்த மண்ணில் நன்றாக விளையாடுகிறது. அது ஒரு ஸ்வாரஸ்யமான அணியும் கூட அந்த அணி முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. மிட்ஃபில்டு மற்றும் தடுப்பாட்டத்தில் அந்த அணி சிறந்து விளங்குகிறது என குறிப்பிடுகிறார்.

ஜாம்ஷெட்பூர் மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகளில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். பெர்த்தோலோம் ஓக்பேச், ஜுவான் மஸ்கியா மற்றும் ஃபெடெரிகோ காலிகோ போன்றவர்கள் நார்த் ஈஸ்ட் அணியிலும், மெமோ, மரியோ ஆர்க்ஸ் மற்றும் கார்லோஸ் கால்வோ ஆகியோரின் ஜாம்ஷெட்பூர் அணியிலும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அதே நேரத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ சிடோன்ச்சாவும், நார்த் ஈஸ்ட் அணியின் அகஸ்டின் ஒக்ராவும் காயம் காரணமாக விளையாடவில்லை. இது இரு அணிகளுக்கும் பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சீசர் ஃபெராண்டோ, நார்த் ஈஸ்ட் அணி மிகச் சிறந்த அணி. அவர்கள் மிக நன்றாக விளையாடுகிறார்கள்.

கடந்த இரண்டு ஆட்டங்களிலும் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எங்கள் அணியும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. எனவே இந்த ஆட்டமும் சிறப்பானதாகவே இருக்கும் என்கிறார். புயல் போன்று ஆடக்கூடிய மைக்கேல் சூசைராஜ் மீது அனைவரின் கண்களும் உள்ளன. அவர் சிறப்பாக ஆடுவதோடு மட்டுமல்லாமல் ஆட்டத்தில புதுப்புது யுக்தியைக் கையாண்டு வருகிறார். இது ஜாம்ஷெட்பூர் அணிக்கு பலம் சேர்க்கும்.

நார்த் ஈஸ்ட் அணி டிசம்பர் மாதத்துக்கு முன்பு இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் மொத்தத்தில் 8 போட்டிகளில் விளையாடி 5 -ல் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெர்த்தோலோம் ஓக்பேச் போன்ற வீரர்கள் இருப்பதால் வரும் டிசம்பர் மாதத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் வெற்றியைத் தடுக்க முடியாது என்கிறார் எல்கோ ஷட்டோரி.

இந்த போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் தன்னை தக்க வைத்துக் கொண்டால் புளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடலாம். அதே நேரத்தில் தனது சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்பதே சீசர் ஃபெராண்டோவின் நோக்கமாக உள்ளது.

(Photos Courtesy - ISL)

Story first published: Saturday, December 1, 2018, 13:31 [IST]
Other articles published on Dec 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+