Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வீணான கோல் வாய்ப்புகள்.. ஜாம்ஷெட்பூர் எஃப்.சி மற்றும் ஏடிகே இடையிலான போட்டி டிரா

ஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூரில் அக்டோபர் 21 அன்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் 14 ஆவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி மற்றும் ஏடிகே அணிக்கு இடையேயான ஆட்டத்தில் 1- 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 14 ஆவது போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியும், ஏடிகே அணியும் மோதின. ஜாம்ஷெட்பூர் உள்ள ஜெஆர்டி டாடா விளையாட்டு வளாகம் மைதானத்தில் சரியாக 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி இடது புறத்தில் இருந்து வலது புறமாக தங்கள் தாக்குதலைத் தொடங்கினர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதின.

ஜாம்ஷெட்பூர் அணிக்கு கிடைத்த வாய்ப்புகள்

ஜாம்ஷெட்பூர் அணிக்கு கிடைத்த வாய்ப்புகள்

ஆட்டத்தின் 6 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு கோல் அடிக்க ஒரு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது.ஆனால் ஏடிகே வீரர் கேர்சன் அதை தலையால் முட்டி தடுத்தார். ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணிக்கு கோல் அடிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது, ஆனால் ஏடிகே கோல்கீப்பர் பந்தை அருமையாக தடுத்தார்.

வீணான கோல் வாய்ப்புகள்

வீணான கோல் வாய்ப்புகள்

இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மிகச் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தின. 21 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு கோல் அடிக்கக் கிடைத்த மற்றொரு வாய்ப்பையும் அது நழுவவிட்டது. அதே நேரத்தில் இரு அணிகளுக்கும் பல முறை கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இரு அணிகளும் கோல்

இரு அணிகளும் கோல்

ஆட்டத்தின் 35 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் செர்ஜியோ சிடோன்கா அற்புதமாக ஒரு கோல் அடித்து ஏடிகே அணிக்கு அதிர்ச்சி அளித்தார். முதல் பாதியில் 3 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. ஏடிகே அணிக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட மானுவல் லான்சரோட் மிக திறமையாக ஒரு கோல் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

அணிகளும் போராட்டம்

அணிகளும் போராட்டம்

இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதி தொடங்கிய 52 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதனை அவர்கள் நழுவவிட்டனர். இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மிகச் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தின. 62 மற்றும் 64 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு கோல் அடிக்கக் கிடைத்த மற்றொரு வாய்ப்பையும் அது நழுவவிட்டது.

ஏடிகே அணிக்கு மஞ்சள் அட்டை

ஏடிகே அணிக்கு மஞ்சள் அட்டை

ஜாம்ஷெட்பூர் அணிக்கு தொடர்ந்து இரண்டு வாய்ப்புகள் கிடைத்தும் அந்த அணி அதை தவறவிட்டது. இரண்டு அணிகளிலுமே பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 81 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் மேனுவலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

நழுவிய கார்னர் கிக் வாய்ப்பு

நழுவிய கார்னர் கிக் வாய்ப்பு

இதைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் 5 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஒரு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை அவர்கள் நழுவவிட்டனர். ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் ஆட்டம் 1 -1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

Story first published: Monday, October 22, 2018, 14:18 [IST]
Other articles published on Oct 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+