For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2018 : வாழ்வா? சாவா? போராட்டத்தில் புனே! சொந்த மண்ணில் வெற்றி பெறும் முனைப்பில் கேரளா!!

ISL 2018 : வாழ்வா? சாவா? போராட்டத்தில் புனே! சொந்த மண்ணில் வெற்றி பெறும் முனைப்பில் கேரளா!!

கொச்சி : கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இந்த சீசனில் தனது சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்யாத நிலையில் புனே சிட்டி அணியை எதிர்த்து இன்று விளையாடுகிறது.

ISL 2018 - Kerala Blasters FC vs FC Pune City match no. 51 preview

தற்போது இந்த இரு அணிகளுக்கு இடையே நான்கு புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. கேரள அணி 10 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு அணிகளும் உண்மையிலேயே 11 மற்றும் 9 கோல்கள் என்ற இலக்குடனேயே விளையாடி வருகின்றன.

அடுத்து நடைபெறவுள்ள ஆட்டத்தில் புனே அணியிடமிருந்து ஒரு ஆக்ரோஷமான ஆட்டத்தைத்தான் எதிர்பார்ப்பதாக கேரள அணியின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

ISL 2018 - Kerala Blasters FC vs FC Pune City match no. 51 preview

அந்த அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஹியூம் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். மேலும் அதிக அளவு சஸ்பெண்டு பண்ணப்பட்டவர்கள் அந்த அணியில் இல்லை என்பதால் அவர்கள் மிக நன்றாக ஆடுவார்கள் என நம்புவதாக டேவிட் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக கேரள அணி வீரர்கள் நன்றாக விளையாடுவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜேம்ஸ், உதாரணமாக கடந்த செவ்வாய் கிழமை ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக விளையாடி 1 - 1 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை டிரா செய்ததை குறிப்பிட்டார். அந்த போட்டியில் அற்புதமாக எங்கள் அணியினர் விளையாடினர். ஆனால் மற்றொரு போட்டியில் நாங்கள் ஜெயிக்கவில்லை. அந்த தோல்வியே எங்கள் அணிக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது என்கிறார் ஜேம்ஸ்.

ISL 2018 - Kerala Blasters FC vs FC Pune City match no. 51 preview

இனி வரும் ஆட்டங்களில் புனே மற்றும் பெங்களூரு அணியை வெல்வோம் என்று அவர் உறுதியாக கூறுகிறார். நாளை எங்கள் சொந்த மண்ணில் புனே அணிக்கு எதிராக 3 புள்ளிகள் எடுப்போம் என நம்பிக்கை உள்ளதாக ஜேம்ஸ் தெரிவித்தார்.

ஆனால் நிக்கோலா மற்றும் கெஸிரோன் ஆகியோர் இந்த ஆட்டத்திற்கு தேர்வு செய்யப்படவில்லை. அதே நேரத்தில் ஸ்லாவியா ஸ்டோஜானோவிக் மற்றும் செமினென் டவுன்கல் ஆகியோர் புனே அணியின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுப்பார்கள் என்கிறார் ஜேம்ஸ்.

ISL 2018 - Kerala Blasters FC vs FC Pune City match no. 51 preview

புனே சிட்டி அணியைப் பொறுத்தவரை அதன் இடைக்கால பயிற்சியாளர் பிரதியூம் ரெட்டி, வெளி நாட்டு வீரர்களிடம் இருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறார். மார்சிலோனா, டியாகோ கார்லோஸ் மற்றும் மார்கோ ஸ்டான்கோவி ஆகியோர் இது வரை 4 கோல்கள் மட்டுமே அடித்துள்ளனர்.

எப்படிப் பார்த்தாலும் புனே அணியின் பிளே-ஆஃப் கனவு தகர்ந்து போய்விட்டது. ஆனால் அதிக புள்ளிகளாவது எடுக்க வேண்டும் என அந்த அணி நினைக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதியூம் ரெட்டி, எங்களுக்கு ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா? சாவா? பிரச்சனைதான் என்கிறார். அதனால் அடுத்து வரும் ஆட்டங்களில் எங்களால் முடிந்த வரை நாங்கள் புள்ளிகளைப் பெற முயற்சி செய்கிறோம் என்கிறார்.

ஐ.எஸ்.எல்லின் டாப் ஸ்கோரரான இயன் ஹியூம் இனிமேல் தான் தனது முன்னாள் அணிக்கெதிராக புள்ளிகள் எடுக்கத் தொடங்க வேண்டும். நீண்ட காலம் காயம் காரணமாக அணியில் விளையாடாமல் இருந்த இவர், கேரளா அணிக்கு எதிராக தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லை என்றால் அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிடும்.

கேரளா மற்றும் புனே அணிகளுக்கு எதிராக நடைபெறும் போட்டி நிச்சயமாக ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டுவந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, December 7, 2018, 16:02 [IST]
Other articles published on Dec 7, 2018
English summary
ISL 2018 - Kerala Blasters FC vs FC Pune City match no. 51 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+