For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெற்றி பெற முடியாத சோகத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்.. ஜாம்ஷெட்பூர்-க்கு எதிரான போட்டி டிரா!!

கொச்சி : கொச்சியில் டிசம்பர் 4 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கேரளா - ஜாம்ஷெட்பூர் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 48 ஆவது கால்பந்து போட்டி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கும் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஜாம்ஷெட்பூர் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - Kerala Blasters FC vs Jamshedpur FC match drawn - Full match report

ஆட்டம் தொடங்கியது முதல் விறுவிறுப்பாக இருந்தது. 12 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மைக்கோல் சூசைராஜ் வெளியேறினார். அவருக்கு பதிலாக ஜெர்ரி களம் இறங்கினார்.

ஆட்டத்தின் 19 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஸ்லாவிசாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர்.

ISL 2018 - Kerala Blasters FC vs Jamshedpur FC match drawn - Full match report

ஆட்டத்தின் 36 ஆவது நிமிடத்தில் கேரள அணியின் காளிச்சரணுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 43 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மிமோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டது,. அந்த மூன்று நிமிடங்களிலும் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கேரளா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் சமநிலையில் இருந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் 46 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து ஆட்டத்தின் 51 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் காளிச்சரன் வெளியேற்றப்பட்டு வினீத் களம் இறக்கப்பட்டார். ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் தீரஜ் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை அற்புதமாக பயன்படுத்திக் கொண்ட கார்லஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இதையடுத்து ஆட்டத்தின் 77 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சிமின்லென் ஒரு கோல் அடித்தார். 84 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஜாகீருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த 5 நிமிடத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கேரளா - ஜாம்ஷெட்பூர் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

(Photos Courtesy - ISL)

Story first published: Wednesday, December 5, 2018, 10:42 [IST]
Other articles published on Dec 5, 2018
English summary
Kerala Blasters FC vs Jamshedpur FC match drawn in ISL 2018. Here is the complete match report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+