Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளே-ஆஃப் போகுமா கேரளா பிளாஸ்டர்ஸ்? ஜாம்ஷெட்பூர் போட்டியில் வென்றால் மட்டுமே முடியும்!

கொச்சி : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஜாம்ஷெட்பூர் அணியை டிசம்பர் 4 அன்று நடைபெறும் லீக் போட்டியில் சந்திக்கிறது.

கேரளா அணிக்கு இது ஒரு மோசமான போட்டியாகும். கடந்த சீசனில் இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கேரளா அணி தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிர்ஷ்டத்தைச் எதிர்பார்த்திருக்கிறது. ஆனால் முதல் சுற்றில் ஏடிகே அணி வெற்றி பெற்றதால் கேரளா அணி கீழ் நோக்கி சென்றுவிட்டது.

ISL 2018 - Kerala Blasters FC vs Jamshedpur FC match no.48 preview

"தற்போது கேரள அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டால் நான்கு மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாகிவிடும். அது கேரளா அணி வீர்களின் கைகளில் உள்ளது" என்கிறார் அதன் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ்.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி வரலாற்றில் கேரளா அணிக்கு இது ஒரு பெரும் தோல்வியாகும். இந்த சீசனில் கேரளா அணியினர் ஏழு புள்ளிகளை இழந்துள்ளனர். "பல ஆட்டங்களில் நாங்கள் வெற்றியின் விளிம்பைத் தொட்டுவிட்டு வந்திருக்கிறோம். இந்த சீசன் தொடக்கத்தில் நாங்கள் எடுத்த முடிவு தவறாக போய்விட்டது. இல்லையென்றால் எங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்திருக்கும்" என்கிறார் டேவிட் ஜேம்ஸ்.

ISL 2018 - Kerala Blasters FC vs Jamshedpur FC match no.48 preview

"ஒரு தலைமைப் பயிற்சியாளராக ஒவ்வொரு ஆட்டத்திலும் நான் வெற்றி பெறுவதையும், ரசிகர்களை குஷிப்படுத்துதையுமே விரும்புகிறேன். ஏடிகே அணிக்கு எதிராக நாங்கள் ஆடிய முதல் ஆட்டம் நாங்கள் தான் வின்னர் என்பது போன்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனாலும் கேரள அணியின் வீரர்கள், பணியாளர்கள் அனைவரும் 100 சதவீத உழைப்பை கொடுக்க தயாராக இருக்கிறோம்" என்கிறார் ஜேம்ஸ்.

"நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் கேரளா அணி ஜெயிக்கவில்லை என்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம். அதே நேரத்தில் கரேஜ் பேகஸன் மற்றும் ஸ்லாவியசா ஸ்டோஜானோவிக் ஆகியோர் அணிக்கு திருப்பியிருப்பது கூடுதல் பலம்" என்கிறார் ஜேம்ஸ்.

"இந்த இருவரும் ஜாம்ஷெட்பூர் எஃப்.சி.க்கு எதிராக களம் இறங்குகின்றனர். தற்போது வரை இந்த இரு அணிகளும் மிகச்சிறந்த ஃபார்மில் இல்லை. அந்த அணியினர் ஒரே ஒரு ஆட்டத்தை இழந்திருக்கிறார்கள், ஆனால் 10 ஆட்டங்களில் ஆறு டிராக்களை பெற்றுள்ளனர்" என்கிறார் ஜேம்ஸ்.

ISL 2018 - Kerala Blasters FC vs Jamshedpur FC match no.48 preview

ஜாம்ஷெட்பூர் அணியைப் பொறுத்தவரை இந்த சீசனில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தில்தான் முதல் முறையாக கோல் அடிக்க முடிந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த ஜாம்ஷெட்பர் அணியின் பயிற்சியாளர் சீசர் ஃபெராண்டோ, "கேரள அணி மிகச் சிறந்த அணி. அதன் பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் மிகச் சிறந்தவர்கள்.மேலும் நாளை அவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவாக இருப்பார்கள்" என்றார்.

ISL 2018 - Kerala Blasters FC vs Jamshedpur FC match no.48 preview

நட்சத்திர வீரர் டிம் காஹில் மிகச் சிறப்பாக விளையாடுவார், அவர் 10 நாட்களுக்கு முன்பு தான் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியிருக்கிறார். நாளை அவர் விளையாடுவதற்கு தயாராக உள்ளார்.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இந்த சீசனில் தொடர்ந்து நீடிப்பதற்கும், ஜாம்ஷெட்பூர் அணி தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் நாளை போட்டியை நம்பியிருக்கிறார்கள்.

(Photos Courtesy - ISL)

Story first published: Monday, December 3, 2018, 19:19 [IST]
Other articles published on Dec 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+