For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐஎஸ்எல் கால்பந்து: பரபரப்பான ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸை எதிர்கொள்ளும் பெங்களூருஅணி

கொச்சி : கொச்சியில் இன்று நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் பரபரப்பான லீக் ஆட்டத்தில் உள்ளூர் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து களமிறங்குகிறது பெங்களூரு அணி.

இந்த ஆட்டம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் மிகவும் பலம் வாய்ந்த அணிகள் என கருதப்படுவதால், இரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள காரசாரமான அந்த ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ISL 2018 - Kerala Blasters vs Bengaluru FC match preview

கடந்த சீசனில் புத்தாண்டு அன்று நடந்த லீக் ஆட்டத்தில் கேரள அணி- யில் ரானே முலன்ஸ்டீன் தலைமையில் வந்த பெங்களூரு அணி மூன்று கோல்களை அடித்து அசத்தியது. இது தான் கடந்த ஆண்டு கேரளா அணி தனது சொந்த மண்ணில் சந்தித்த மிகப் பெரிய தோல்வியாகும். இந்த லீக்கில் பெங்களூரு அணி ஒரு மிகச் சிறந்த அணியாக கருதப்படுகிறது.

கேரளா அணியின் உதவி பயிற்சியாளர் ஹெர்மான் ஹெரிடர்சன் கூறுகையில், நாளை நடைபெறும் போட்டி கடினமானதாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் மூன்று கோல்கள் அடிப்பது என்பதுதான் எங்களது இலக்கு. அந்த இலக்குடன்தான் களம் இறங்குகிறோம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தார்

கேரளா அணி வீரர்கள் டிராக்களை எப்படி வெற்றியாக மாற்றுவது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். இதனால் அணியில் சில மாற்றங்களை செய்ய உதவி பயிற்சியாளர் ஹெர்மான் ஹெரிடர்சன் முடிவு செய்துள்ளார்..

பெங்களூரு எஃப்சி அணியில் மிக்கு பொறி பறக்க விளையாடி வருகிறார். கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற கடந்த போட்டியில் மிக்குவின் திறமையை அந்த அணியின் பயிற்சியாளர் கார்ல்ஸ் குவாட்ராட் சிறப்பாக வெளிக் கொணர்ந்தார். வெனிசுலாவின் ஸ்டிரைக்கர் சந்தேஷ் ஜிந்தனும் எப்படி தனது திறமையை வெளிப்படுத்துகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நட்சத்திர வீரரான சி.கே. வினீத் தனது முன்னாள் அணிக்கு எதிராக விளையாடுகிறார். இதே போல் கடந்த ஆண்டு கேரளாவுக்காக விளையாடிய ரினோ அன்ட்டோ,தற்போது பெங்களூரு எஃப்சி அணிக்கு திரும்பி விட்டார்.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்களது இலக்கை அடைய முயற்சிக்காததால் ஏற்கனவே மூன்று ஏமாற்றங்களைக் சந்தித்திருக்கிறார்கள்.

பெங்களூரு அணியின் பயிற்சியாளர் குவாட்ராட் கூறுகையில், ஜான்சனுக்கும் சுபாஷிற்கும் பதிலாக யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கிறார். அதே நேரத்தில் ஆல்பர்ட் மற்றும் நிஷூ (குமார்) ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் அவர்கள் தங்கள் திறமையைக் காட்டுவதில் தீவிரமாக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

பெங்களூரு அணி தனது 100 சதவிகித சாதனையை தொடர விரும்பும் அதே நேரத்தில் நான்கு தொடர்ச்சியான டிராக்குகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அந்த அணிக்கு வாய்ப்பு உள்ளது.

(Photos Courtesy - ISL)

Story first published: Monday, November 5, 2018, 12:31 [IST]
Other articles published on Nov 5, 2018
English summary
ISL 2018 - Kerala Blasters vs Bengaluru FC match preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+