Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஏடிகே அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி !!

கொல்கத்தா : கொல்கத்தாவில் நேற்று (அக்டோபர் 31) அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் கால்பந்து போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 24 ஆவது கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்கன் மைதானத்தில் ஏடிகே மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகளுக்கு, இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஏடிகே அணி இடதுபுறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 League match - ATK lost to Bangalore FC match result

பெங்களூரு அணியின் சுனில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் பல்வந்த் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கோமல் தட்டல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இரு அணிகளும் போட்டிபோட்டுக் கொண்டு விளையாடின. பெங்களூரு அணி ஆட்டத்தை சமன் செய்ய போராடியது.

பின்னர் ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அரிந்தம் பட்டாச்சாரியாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின்போது ஏடிகே அணியின் காலு உச்சே காயமடைந்தார். இதையடுத்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் எல் மைமோனி களமிறக்கப்பட்டார். இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

அந்த கடைசி நிமிடங்களை பெங்களூரு அணி சரியாக பயன்படுத்திக் கொண்டது. ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மிக்கு அருமையான கோல் ஒன்றை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இறுதியில் முதல் பாதி ஆட்டத்தில் 1 - 1 என்ற கோல் கணக்கில் ஏடிகே மற்றும் பெங்களூரு அணிகள் சமநிலையில் இருந்தன.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியவுடன் 47 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் எரிக் பர்த்தலு அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து 49 ஆவது நிமிடத்தில் எரிக் பர்த்லுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்படடது.

ஆட்டத்தின் 58 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நிஜுகுமாருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்நது இரண்டு அணிகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து ஆட்டத்தின் 84 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் புரோனேவுக்கும் 90 ஆவது நிடத்தில் பெங்களூரு அணியின் ஜுனானுக்கம் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஆனாலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து 2 - 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி , ஏடிகே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Thursday, November 1, 2018, 18:34 [IST]
Other articles published on Nov 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+