Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு கோல் கூட போட முடியலையே.. பரிதாப புனே.. அடித்து நொறுக்கிய மும்பை

மும்பை : மும்பையில் அக்டோபர் 19 அன்று நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை அணி 2 -0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

5 ஆவது ஹீரோ இந்தியன் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 12ஆவது ஆட்டம் மும்பை அரினா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

இதில் மும்பை சிட்டி எஃப்சி அணியும், எஃப் சி புனே சிட்டி அணியும் மோதின. மாலை சரியாக 7.30 மணிக்கு ஆட்டம் தொங்கியது.

வாய்ப்பை நழுவ விட்ட புனே

வாய்ப்பை நழுவ விட்ட புனே

டாஸ் வென்ற புனே சிட்டி அணி இடது புறம் இருந்து தனது ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே புனே அணிக்கு கோல் அடிக்க சரியான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த அணி அதை நழுவவிட்டது. 9 ஆவது நிமிடத்தில் புனே அணியின் ஆஷிக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

முதல் கோல் அடித்த மும்பை

முதல் கோல் அடித்த மும்பை

இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மிகச் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தின. 21 ஆவது நிமிடத்தில் புனே அணிக்கு கோல் அடிக்கக் கிடைத்த மற்றொரு வாய்ப்பையும் அது நழுவவிட்டது. ஆனால், அடுத்த வாய்ப்பு மும்பை அணிக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் மொடு சோகு அற்புதமாக ஒரு கோல் அடித்து புனே அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.

மும்பை பெனால்டியில் கோல்

மும்பை பெனால்டியில் கோல்

மேலும் 29 ஆவது நிமிடத்தில் மும்பை அணிக்கு கோல் அடிக்க மற்றுமொரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு நழுவியது. 35 ஆவது நிமிடத்தில் இரு அணி வீரர்களும் கீழே விழுந்ததில் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. ஆட்டத்தின் 44 ஆவது நிமிடத்தில் மும்பை அணிக்கு ஒரு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரஃபேல் பாஸ்டோஸ் மிக திறமையாக ஒரு கோல் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மும்பை முன்னிலை

மும்பை முன்னிலை

இதைத் தொடர்ந்து 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அந்த நிமிடங்களில் எந்த ஒரு அணியும் கோல்கள் அடிக்கவில்லை. இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் மும்பை அணி 2 -0 என்ற போல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரண்டு அணிகளும் மிகக் கடுமையாக விளையாடின, மும்பை அணி 2 கோல் அடித்துவிட்டதால் அதை சமன் செய்யும் முயற்சியில் புனே சிட்டி அணி பெரும் முயற்சி செய்தது.

புனே சொதப்பல்

புனே சொதப்பல்

புனே அணிக்கு தொடர்ந்து இரண்டு வாய்ப்புகள் கிடைத்தும் அந்த அணி அதை தவறவிட்டது. இரண்டு அணிகளிலுமே பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 83 ஆவது நிமிடத்தில் மும்பை அணிக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பு நழுவிப் போயிற்று.

வெற்றி பெற்ற மும்பை

வெற்றி பெற்ற மும்பை

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடம் வந்தபோது இரு அணிகளுக்கும் மேலும் 5 நிமிடங்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டது. எவ்வளவோ முயன்றும் புனே சிட்டி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து மும்பை சிட்டி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் புனே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Saturday, October 20, 2018, 11:07 [IST]
Other articles published on Oct 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+