Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசில இப்படி ஆகிடுச்சே!! ஏமாற்றத்தோடு முடிந்த நார்த் ஈஸ்ட் - ஏடிகே போட்டி!!

கவுகாத்தி : கவுகாத்தியில் டிசம்பர் 8 அன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் மற்றும் ஏடிகே அணிகளுக்கிடையேயோன ஆட்டம் கோல் எதுவும் எடுக்காமல் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 52 ஆவது கால்பந்து போட்டி கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதலெட்டிக் ஸ்டேடியத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிக்கும் ஏடிகே அணிக்கும் இடையே நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஏடிகே அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2018 - North East United FC vs ATK match ends in a goalless draw

ஆட்டத்தின் தொடக்கம் சற்று மந்தமாகவே இருந்தது. 10 நிமிடங்களுக்குப் பின்னர் தான் ஆட்டம் சூடு பிடித்தது. ஆட்டத்தின் 10 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அன்கிட்டுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. நார்த் ஈஸ்ட் அணி தங்கள் சொந்த மண்ணில் விளையாடுவதால் ஏடிகே அணிக்கு வீரர்கள் கடுமையான அழுத்தம் கொடுத்தனர்.

அதே நேரத்தில் இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தன. ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டது. அந்த இரண்டு நிமிடத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

ISL 2018 - North East United FC vs ATK match ends in a goalless draw

ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை பெற்றிருந்தன.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது. 72 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ரீகன் சிங்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2018 - North East United FC vs ATK match ends in a goalless draw

இதையடுத்து ஆட்டத்தின் 86 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் பல்வந்த் சிங் வெளியேற்றப்பட்டு கோமல் தட்கல் களம் இறக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதையடுத்து நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் மற்றும் ஏடிகே அணிகளுக்கிடையேயோன ஆட்டம் கோல் எதுவும் எடுக்காமல் 0 - 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

(Photos Courtesy - ISL)

Story first published: Sunday, December 9, 2018, 15:36 [IST]
Other articles published on Dec 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+