For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பட்டையை கிளப்பப் போகும் நார்த் ஈஸ்ட் - பெங்களூரு போட்டி! இரண்டு சிறந்த அணிகள் மோதல்!!

கவுகாத்தி : ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கவுகாத்தி இந்திரா காந்தி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியுடன் மோதுகிறது பெங்களூரு அணி.

இந்த லீக் ஆட்டத்தில் மிகச் சிறந்த அணியாக பெங்களூரு அணி உள்ளது. யாராலும் வெல்ல முடியாத அந்த அணி எட்டு ஆட்டங்களில் 7 - ல் வென்று வீர நடை போட்டு வருகிறது.

ISL 2018 - North East United FC vs Bengaluru FC match preview

நார்த் ஈஸ்ட் அணியின் பயிற்சியாளர் எல்கோ ஷட்டரி பெங்களூரு அணியின் தொடர் வெற்றிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார். ஆனால் நார்த் ஈஸ்ட் அணி அதன் சொந்த மண்ணில் இது வரை பெரிதாக சோபிக்கவில்லை.

கவுகாத்தியில் நடைபெற்ற 4 ஆட்டங்களில் அவர்கள் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் 20 புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என ஷட்டரி தெரிவித்துள்ளார். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. ஏனென்றால் இனி வரும் போட்டிகள் கடினமாகவும் சவாலாகவும் இருக்கும்.

ISL 2018 - North East United FC vs Bengaluru FC match preview

பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் மிக்கு இல்லாதது அவர்களுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அவர்கள் மிக்கு இல்லாமல் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் கோல்டன் பூட் வெற்றியாளர் பர்த்தலோமி எங்கள் அணிக்காக திறமையாக விளையாடுவார் என்கிறார் ஷட்டரி.

பெங்களூரு அணியின் மிட்ஃபீல்ட் ஆட்டக்காராக்ளான டிமாஸ் டெல்கடோ மற்றும் எரிக் பர்தலூ ஆகியோரை சமாளிக்கும் வகையில் எங்கள் அணியில் ஜோஸ் லியூடோ மற்றும் ரவுல்லின் போர்கஸ் ஆகியோர் உள்ளனர். அவர்கள் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்கிறார் ஷட்டரி.

ISL 2018 - North East United FC vs Bengaluru FC match preview

பெங்களூரு அணியில் மிக்கு இல்லாத நிலையிலும் அந்த அணி சுனில் ஷட்டரி மற்றும் உதாந்தா சிங் உள்ளிட்டோரின் கடுமையான உழைப்பால் தங்கள் சொந்த மண்ணில் இல்லாமல் வேறு இடங்களில் 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 100 சதவீதம் சாதனை படைத்துள்ளது.

பெங்களூரு அணியின் தொடர் வெற்றிக்கு வீரர்களின் கூட்டு முயற்சியே காரணம் என கூறும் அந்த அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட், பிளே ஆஃப் சுற்றில் ராகுல் பீஹே மற்றும் நிஷு குமார் போன்ற வீரர்கள் பெங்களூரு அணி சார்பில் ஒரு கோல் அல்லது இரண்டு கோல்கள் அடித்து தங்களின் பங்களிப்பை செய்துள்ளனர்.

ISL 2018 - North East United FC vs Bengaluru FC match preview

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரேட், நார்த் ஈஸ்ட் அணி இந்த சீசனில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். களத்தில் இறங்குவதற்கு முன்பு அவர்கள் நன்கு பயிற்சி எடுக்கின்றனர். அவர்கள் மிகக் கடுமையாக உழைக்கின்றனர். நார்த் ஈஸ்ட் அணியிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் அவர்களும் வளர்ந்து வருகின்றனர் என்றார்.

பெங்களூரூ அணியினர் தங்கள் சொந்த மண் அல்லாத இடத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தத்தில் உள்ளனர். அதே நேரத்தில் தங்கள் சொந்த மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தாங்கள் இருப்பதாக கூறுகிறார் எல்கோ ஷட்டரி.

(Photos Courtesy - ISL)

Story first published: Wednesday, December 5, 2018, 15:18 [IST]
Other articles published on Dec 5, 2018
English summary
In ISL 2018, North East United FC and Bengaluru FC are facing each other to become the table topper.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+