For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நார்த் ஈஸ்ட் 2 கோல்கள் போட்டு அசத்தல் வெற்றி.. கேரளா பரிதாபம்!!

கவுஹாத்தி : கவுஹாத்தில் நேற்று (நவம்பர் 23) நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டட் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் கேரளா அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

5 ஆவது ஹீரோ ஐஎஸ்எல் சூப்பர் லீக் 36 ஆவது கால்பந்து போட்டி கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைட்டட் அணிகள் மோதின. கவுஹாத்தி இந்திராகாந்தி மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

ISL 2018 - North East United FC vs Kerala Blasters FC match result

இத்தொடரில் நார்த் ஈஸ்ட் அணி 6 போட்டிகளில் ஆடி 11 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் இருந்தது. கேரள பிளாஸ்டர்ஸ் அணி 7 போட்டியில் ஆடி 9 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் இருந்தது.

இவ்விரு அணிகளும் ஐஎஸ்எல் போட்டிகளில் 8 போட்டியில் ஆடியிருந்தன. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் 5 ஆட்டங்களிலும் நார்த் ஈஸ்ட் 2 போட்டிகளிலும் வென்றிருந்தன. 3 போட்டிகள் டிராவில் முடிந்திருந்தன.

ISL 2018 - North East United FC vs Kerala Blasters FC match result

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் போட்டி தொடங்கியது. இந்த சீசனில் நார்த் ஈஸ்ட் அணி சொந்த களத்தில் ஒரு முறை கூட வெற்றிபெறவில்லை. இதனால் சொந்த களத்தில் முதல் வெற்றியை பெறும் முனைப்புடன் நார்த் ஈஸ்ட் வீரர்கள் அபாரமாக ஆடினர். பந்து பெரும்பாலான நேரம் அவர்கள் கால்வசமே இருந்தது.

ISL 2018 - North East United FC vs Kerala Blasters FC match result

25வது நிமிடத்தில் கொமோர்ஸ்கி அடித்த பந்து துரதிர்ஷ்டவசமாக கோலாக மாறவில்லை. முரட்டு ஆட்டத்துக்காக 38 வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் வீரர் ஆர்.சிங்குக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதற்கு இரு நிமிடங்கள் முன்பாக கேரளா பிளாஸ்டர்ஸின் லேகிக் பெசிக்கும் மஞ்சள் அட்டை பெற்றிருந்தார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தன.

இதைத் தொடர்ந்து 2வது பாதி ஆட்டம் தொடங்கியது. இரு அணிகளும் சம பலத்துடன் ஆடியதால் கோல் எதுவும் விழவில்லை. 63வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் வீரர் டவுங்கலுக்கு மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் 66வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி முண்டம்பராவை மாற்று வீரராக களமிறக்கியது. இந்த முடிவு சில நிமிடங்களிலேயே 'கால்' மேல் பலன் தந்தது.

ISL 2018 - North East United FC vs Kerala Blasters FC match result

73வது நிமிடத்தில் முண்டம்பரா கடத்தி தந்த பந்தை பொப்லாட்னிக் நேர்த்தியாக கோலாக மாற்றினார். இதனால் கேரள அணி ஒரு கோல் முன்னிலை பெற்றது. இந்நிலையில் டாப் கியருக்கு மாறிய நார்த் ஈஸ்ட் வீரர்கள் இன்ஜுரி டைமில் இரு கோல்கள் அடித்து அசத்தினர். ஒக்பெச் மற்றும் மஸ்கியா அடித்த கடைசி நேர மாயாஜால கோல்களால் நார்த் ஈஸ்ட் 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

(Photos Courtesy - ISL)

Story first published: Saturday, November 24, 2018, 10:01 [IST]
Other articles published on Nov 24, 2018
English summary
ISL 2018 - North East United FC vs Kerala Blasters FC match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+