Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியை வீழ்த்துமா மும்பை சிட்டி அணி?

கவுஹாத்தி : கவுஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி அத்தெலட்டிக் ஸ்டேடியத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற உள்ள ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி அணியை எதிர்த்து நார்த் ஈஸ்ட் அணி மோத உள்ளது.

வெற்றி அட்டவணையில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் நார்த் ஈஸ்ட் அணி மூன்றாவது இடத்திலும் முப்பை சிட்டி அணி 5 ஆவது இடத்திலும் உள்ளது. இதில் ஒரு அணி 5 ஆட்டங்களில் 11 புள்ளிகளும், மற்றொரு அணி 6 ஆட்டங்களில் 10 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

ISL 2018 - North East United FC vs Mumbai City FC match preview

எல்கோ ஷட்டரி தலைமையிலான நார்த் ஈஸ்ட் அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நார்த் ஈஸ்ட் அணியின் பர்த்தலோமிவ் ஆக்பேச் மற்றும் பெர்னாண்டோ காலிகோ ஆகியோர் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார்கள். எஃப்சி கோவா அணியின் ஃபெரான் கொரோமினாஸ் 5 போட்டிகளில் 6 கோல்கள் அடித்தார், அதே போல் காலிகோ 5 ஆட்டங்களில் 4 கோல்களை அடித்தார்.

ஷட்டரியின் தலைமையிலான நார்த் ஈஸ்ட் அணியினர் மூன்று ஆட்டங்களில் மூன்றையும் வென்றது. தற்போது நாளை சொந்த மண்ணிலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்பப்படுகிறது. இதே போல் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா தலைமையிலான மும்பை அணியும் வலுவான நிலையில் உள்ளது.

ISL 2018 - North East United FC vs Mumbai City FC match preview

இது குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் கோஸ்டா கூறுகையில், கடந்த இரண்டு மூன்று நாட்களான நார்த் ஈஸ்ட் அணி வீரர்களின் ஆட்டத்தை கவனித்து வருகிறேன், அவர்கள் மிக நன்றாக விளையாடுகிறார்கள். நாளை நடைபெறவுள்ள அந்த 90 நிமிட போராட்டம் கடுமையானதாக இருக்கும், அதே நேரத்தில் நாங்களும் வலுவான நிலையில் உள்ளோம். எனவே 3 புள்ளிகளைப் பெற்று எங்கள் சொந்த ஊர் திரும்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் நார்த் ஈஸ்ட் அணியின் குர்வீந்தர் சிங் காயம் காரணமாக விளையாடவில்லை ஆனால் போர்ச்சுக்கீசிய பயிற்சியாளரான ஷட்டரி இகு குறித்து கவலைப்படவில்லை.

ISL 2018 - North East United FC vs Mumbai City FC match preview

இது குறித்து கருத்து தெரிவித்த ஷட்டரி, முன்னணியில் உள்ள எங்கள் வீரர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் தடுப்பாட்டத்தை மேற்கொள்வார்கள். பெங்களூரு அணிக்கு எதிராக நாங்கள் அதிக கோல் அடித்ததைப் போல மும்பைக்கு எதிராக நாளையும் சிறப்பாக விளையாடுவோம் என்றார்.

ISL 2018 - North East United FC vs Mumbai City FC match preview

தங்களது முந்தைய ஆட்டத்தில் மும்பை அணி சிறப்பாக விளையாடியதைப் போல நாளையும் சிறப்பாக விளையாடும். இதே அணுகுமுறையை நார்த் ஈஸ்ட் அணியும் பின்பற்றி வெற்றி பெறுமா ?

(Photos Courtesy - ISL)

Story first published: Friday, November 9, 2018, 10:15 [IST]
Other articles published on Nov 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+