கலக்கத் துடிக்கும் பெங்களூரு.. மோசமாக ஆடும் புனே.. யார் வெல்வார்கள்?
புனே : ஹீரோ ஐஎஸ்எல் தொடரில் புனேவில் இன்று நடைபெறும் போட்டியில் எஃப்சி புனே-பெங்களூரு எஃப்சி அணிகள் மோதுகின்றன.
புனே அணி தற்போது ஒரு புள்ளியுடன் 9வது இடத்தில் உள்ளது. பெங்களூருவுக்கு எதிராக வென்றாக வேண்டிய நெருக்கடியில் புனே உள்ளது.
கடந்த சீசனில் இதே பெங்களூருவிடம் தோற்றுத்தான் புனே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் தயாராகி விட்டோம்
இந்த போட்டிக்காக நன்றாக தயாராகி உள்ளது எதிராளிகள் பலம், பலவீனத்தை நன்கு உணர்ந்துள்ளதாகவும் அவர்களை வெல்வது எப்படி என்பது தெரியும் என புனே பயிற்சியாளர் மிகுல் போர்ச்சுகல் கூறுகிறார். எமிலியானோ அல்ஃபாரோ, மார்சிலினோ ஆகிய தாக்குதல் வீரர்களை மிகவும் நம்பியுள்ளார் இவர்.

மோசமான செயல்பாடு
கடந்த 2 போட்டியில் புனே 1 கோல் மட்டுமே அடித்துள்ளது. 21 முயற்சிகளில் ஒன்று மட்டுமே பலித்துள்ளது. கோல் கன்வெர்ஷன் ரேஷ்யோ 4.76% மட்டுமே. மற்ற எந்த அணிகளையும் விட இது மோசமான செயல்பாடு.

துடிப்பாக இருக்கும் பெங்களூரு
மறுபுறம் பெங்களூரு அணி இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் சென்னையின் அணியை வென்ற போதிலும் இவ்வெற்றி சிறப்பானதாக இல்லை. எனினும் கடந்த சீசனை போல இம்முறையும் கலக்க பெங்களூரு வீரர்கள் துடிப்பாக உள்ளனர்.

புனே சவாலானது
புனே அணி சவாலானது என்றும் இதனிடம் எச்சரிக்கை ஆக இருக்க வேண்டும் என்றும் பெங்களூரு பயிற்சியாளர் குவாட்ரட் கூறுகிறார். இப்போட்டியில் தாக்குதல் வீரர்கள் சுனில் சேத்ரியும் மிக்குவும் பெங்களூருவுக்கு பெரும் பலமாக இருப்பர். கடந்த சீசனில் இவ்விருவரும் புனேவுக்கு எதிராக 7 கோல் அடித்துள்ளனர். இந்நிலையில் இன்று போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications