Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐஎஸ்எல் 2018 : தோல்வியே காணாத பெங்களூரு.. தடுத்து நிறுத்துமா ஏடிகே?

பெங்களூரு : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 2019 தொடரில் தாங்கள் ஒரு வெல்ல முடியாத அணி என நிரூபிக்க பெங்களூரு அணி வீரர்கள் தொடர்ந்து தயாராகி வருகின்றனர்.

புள்ளி அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்துள்ள பெங்களூரு எஃப்சி அணி அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள பெங்களூரு ஸ்ரீ காண்டீவரா ஸ்டேடியத்தில் டிசம்பர் 13 அன்று ஏடிகே அணியுடன் மோதுகிறது.

ISL 2018 - Will ATK beat Bengaluru FC for the first time? match 56 preview

கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூரு அணியில் இருந்த ஜான் ஜான்சன் தற்போது ஏடிகே அணியில் விளையாடுகிறார். இந்த ஆங்கிலேய தடுப்பாட்டக்காரர் ஏடிகே அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

ரத்தில் ஜான் ஜான்சன் மற்றும் லிங்கிடோ ஆகியோர் இல்லை என்றாலும் பெங்களூரு அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனென்றால் ஆல்பர்ட் செரான் மற்றும் ஜுவான் ஆகிய இரட்டையர்கள் அணியின் பின்னால் இருந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

எங்கள் அணிக்கு கடந்த சீசனில் 10 ஆட்டங்களுக்குப் பிறகு 18 புள்ளிகள் இருந்தன. இந்த சீசனில் எங்களுக்கு 24 புள்ளிகள் உள்ளன. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது கடந்த ஆண்டு போன்றே ஒரு அற்புதமான சீசனாக உள்ளது. தற்போது நாங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளோம்.

நாங்கள் 5 ஆட்டங்களில் மிக்குவுடன் இருந்தோம். 5 ஆட்டங்கள் அவர் இல்லாமல் விளையாடி வருகிறோம். முதல் 5 ஆட்டங்களில் நாங்கள் 13 புள்ளிகள் பெற்றோம். அடுத்த 5 ஆட்டங்களில் 11 புள்ளிகள் பெற்றுள்ளோம். மிக்கு ஒரு முக்கியமான் வீரர். ஆனாலும் அவர் இல்லை என்றாலும் எங்கள் அணி சிறப்பாக விளையாடும் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட்.

ISL 2018 - Will ATK beat Bengaluru FC for the first time? match 56 preview

மிட்ஃபீல்டரான ஹர்மான்ஜோட் கப்ரா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக தற்காலிகமாக மூன்று வெளிநாட்டு மிட்ஃபீல்டர்கள் எரிக் பர்தலூ, சிஸ்கோ ஹெர்னாண்டஸ் மற்றும் டிமஸ் டெல்காடோ ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர். அதே போல் போதிங் ஹாக்கிப்புக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்கிறார் குவாட்ரெட்.

ஒரு கடுமையான விளையாட்டை ஏடிகே அணியிடம் இருந்து எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள பெங்களூரு பயிற்சியாளர், அவர்கள் நல்ல புள்ளிகளைப் பெற்று வெல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனாலும் நாங்கள் ஜெயிப்பதற்கான முயற்சியை மேற்கொள்வோம் என்றார்.

கவுகாத்தியில் கோல் எதுவும் எடுக்காமல் டிராவில் முடித்துக் கொண்ட ஏடிகே அணி தற்போது நாளை மீண்டும் களம் இறங்குகிறது. கடந்த 4 போட்டிகளில் 3 -ல் அந்த அணி டிரா மட்டுமே பெற்றது. ஆனால் வலுவான பெங்களூரு அணியுடம் விளையாடுவது சற்று கடினம் தான் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் காப்பல்.

நாங்கள் வாய்ப்புகளைப் பற்றி கவலையில்லை என்றாலும் இந்த போட்டியில் டிரா இல்லாமல் வெற்றி பெறுவோம் என்கிறார் அவர்.

ஸ்டீவ் கோப்பல் அணியில் உள்ள ஜான்சன், ஆண்ட்ரே பைக்கி, கெர்ஸன் விய்ரா மற்றும் ப்ரோனே ஹலேடர் ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள்.

கொல்கத்தாவில் நடைபெற்ற பெங்களூரு எஃப்.சி. அணிக்கு எதிரான ஆட்டத்தில் பல யுக்திகளை கையாண்ட இங்கிலாந்து பயிற்சியாளர் காப்பல் இந்த போட்டியில் அதை மீண்டும் கடைப்பிடிப்பார்.

பெங்களுரு அணி ஒரு வெல்ல முடியாத அணி என்று பெயரெடுத்துள்ளது. பெங்களூரு அணியுடன் விளையாடுவது என்பது ஒரு சவாலான போட்டி. ஆனாலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிறார் ஏடிகே அணியின் ஸ்டீவ் காப்பல்.

(Photos Courtesy - ISL)

Story first published: Thursday, December 13, 2018, 12:57 [IST]
Other articles published on Dec 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+