For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம் வீரர்கள் தான் ஒரே வழி.. வெற்றிகளை குவிக்க ஏடிகே அணியின் சூப்பர் திட்டம்!

கொல்கத்தா : கால்பந்து ரசிகர்கள் அனைவரின் கண்களும் இந்த சீசனில் ஏடிகே அணியின் மீதே உள்ளன.

ஏனென்றால், அது புகழ்பெற்ற பெரிய வீரர்களை கொண்ட அணி. எனவே ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் அனைவரின் கவனத்தையும் அந்த அணி எளிதில் ஈர்க்கும் திறனை கொண்டுள்ளது.

ISL 2019-20 : ATK is planning a future with young players

இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி மூன்றாவது முறையாக அந்த பட்டத்தை பெற முழு திறமையையும் வெளிப்படுத்தும். இந்நிலையில் இளம் வீரர்களை கண்டறிய அந்த அணி எடுத்த முயற்சிகள் பலன் தர தொடங்கியுள்ளது.

கடந்த சீசனில் ஏடிகே அணி கல்கத்தா கால்பந்து லீக்கில் இளம் அணியை களமிறக்கியது. இது மேற்கு வங்கத்தின் தொழில்முறை லீக் என்பதுடன் ஆசிய கண்டத்தின் மிகப் பழமையான போட்டிகளில் ஒன்று.

பொதுவாக கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற குறுக்குவழிகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் உள்ளூர் அளவிலான இந்த போட்டிகளின் மூலம் தங்கள் இளம் வீரர்களை மேம்படுத்த ஏடிகே முயற்சிக்கிறது. தற்போது கல்கத்தா கால்பந்து லீக்கில் பங்கேற்கும் ஏடிகே அணி, நான்காவது அடுக்கு போட்டியில் தொடங்கி, பிரீமியர் பிரிவு 'ஏ' இல் ஒரு இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. கொல்கத்தா கால்பந்து லீக்கில் கடந்த சீசனில் 2வது பிரிவு போட்டியில் ஏடிகே தோல்வியே அடையாமல் மகுடம் சூடியது.

ISL 2019-20 : ATK is planning a future with young players

தற்போது அந்த அணி கொல்கத்தா கால்பந்து லீக் பிரிவு 1ல் இடம்பெற்றுள்ளது. அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார்களானால் அப்பகுதி பெரிய அணிகளில் ஒன்றாக இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.

ஆரம்ப சுற்றில் ஏடிகே அணி நம்ப முடியாத அளவுக்கு முதலிடத்தில் இருந்தது, அந்த லீக் போட்டிகளில் ஏடிகே அணி 26 கோல்களை அடித்தது. ஆறு கோல்களை மட்டுமே விட்டுத் தந்தது. மொத்தம் 11 போட்டிகளில் ஒன்பதில் வென்றது.

கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நிச்சயமாக ஏடிகே அணிக்கு வெற்றியைத் தரும். அதே நேரத்தில் ஏடிகே அணி சிறப்பாக விளையாடினால் மோஹன் பகான், ஈஸ்ட் பெங்கால் மற்றும் முகமதன் ஸ்போர்டிங் ஆகிய ஜாம்பவான்களுடன் முதல் பிரிவில் விளையாட முடியும்.

கொல்கத்தா மற்றும் கல்கத்தா கால்பந்து லீக்கிற்கு ஒரு பெரிய ஒரு நீண்ட வரலாறு உள்ளது. உதாரணமாக சி.எஃப்.எல் கால்பந்து போட்டிகளில் , ஈஸ்ட் பெங்கால் அணி 39 முறை வென்றது. மேலும் அண்மையில்தான் அந்த அணி தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடியது.

மோகன் பகான் 30 முறையும் முகமதன் ஸ்போர்டிங் 22 முறையும் பட்டம் வென்றுள்ளன. அடுத்து வரும் இரண்டு சீசன்களில் பெரிய அணிகளை எதிர்கொள்வதே இந்த அணியின் நோக்கம் என்று ஏடிகே ரிசர்வ் அணியின் தலைமை பயிற்சியாளர் டெகி கார்டோசோ தெரிவித்துள்ளார்.

கார்டோசோ தனது சொந்த ஊர் கிளப்பான எஃப்.சி கோவாவிடமிருந்து வந்த இதேபோன்ற சலுகைகளை நிராகரித்து விட்டு சவாலை ஏற்பதற்காகவே கொல்கத்தா வந்தார். நான் எனது மன திருப்திக்காகத்தான் கோவா மண்டலத்திலிருந்து வெளியே வந்தேன். தற்போது ஒரு மூத்த அணிக்கு ஒரு பாதையை உருவாக்கும் வகையில் இளைஞர்களுக்கு நான் உதவுகிறேன் என்பதில் எனக்கு அதிக திருப்தி இருக்கிறது என்கிறார் டெகி கார்டோசோ.

இந்த சீசனில், பயிற்சியாளர் அன்டோனியோ லோபஸ் ஹபாஸ் முதல் பிரிவில் மூன்று ரிசர்வ் அணி வீரர்களை தேர்வு செய்துள்ளார். சுமித் ரதி, அனில் சவான் மற்றும் லாரா ஆகியோர் அணிக்கு வந்துள்ளனர். மேலும் ஏடிகே அணியின் வெற்றிக்கு அவர்கள் தரும் பங்களிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

ஐந்து வயதான ஏடிகே அணி சரியான பாதையில் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளது, கால்பந்து போட்டிகளில் ஏடிகே கிளப்பின் அணுகுமுறையும், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பும் அந்த அணிக்கு ஒரு சிறந்த வெற்றியை பெற்றுத்தரும்.

Story first published: Friday, October 18, 2019, 11:01 [IST]
Other articles published on Oct 18, 2019
English summary
ISL 2019-20 : ATK is planning a future with young players, as the young players are showing good signs now.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+