For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதன்முறையாக களமிறங்கும் ஹைதராபாத் எஃப்சி.. ஏடிகே அணிக்கு எதிராக சரித்திரம் படைக்குமா?

கொல்கத்தா : ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கின் புதிய கிளப் ஹைதராபாத் எஃப்சி கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யூபா பாரதி கிரிரங்கன் மைதானத்தில் ஏடிகே அணியை எதிர்த்து முதல் முறையாக விளையாடுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி பெற்ற வெற்றி ஹைதராபாத் அணிக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. அன்று ஏ.டி.கே போட்டியை நன்றாகத் தொடங்கி கார்ல் மெக்ஹக் ஒரு கோல் அடித்தன் மூலம் முன்னிலை பெற்றார். ஆனால், கேரளா வெற்றி பெற்றுவிட்டது.

ISL 2019-20 : ATK vs HFC match 6 preview

இதையடுத்து பயிற்சியாளர் அன்டோனியோ ஹபாஸ் ஹைதராபாத் எஃப்சிக்கு எதிராக கண்டிப்பாக முன்னேற வேண்டும் என்று ஒப்புக் கொண்டார்.

எங்கள் அணியில் ஏழு புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியை இழக்க நாங்கள் விரும்பவில்லை. சென்ற போட்டியைக் குறித்து கவலைப்படாமல் இனி எங்கள் முன்னால் இருக்கும் போட்டியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்கிறார் பயிற்சியாளர், அன்டோனியோ ஹபாஸ்.

ISL 2019-20 : ATK vs HFC match 6 preview

கொச்சியில் தனது ஐஎஸ்எல் கணக்கைத் தொடங்க ஏடிகே அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால், ஸ்டார் ஸ்ட்ரைக்கர் ராய் கிருஷ்ணாவும், ஜாவி ஹெர்னாண்டஸும் முக்கிய வீரர்களாக இருந்தார்கள். இதே போல் மைக்கேல் சூசைராஜ் போன்றவர்கள் ஏடிகேக்கு நல்ல ஆதரவை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் நாம் வெல்ல வேண்டும் என்பது என் மனதில் இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரு தந்திரத்துடன் செயல்பட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக சிறப்பாக செயல்படுவதே முக்கியத்துவம் என்றார் ஹபாஸ்.

ISL 2019-20 : ATK vs HFC match 6 preview


ஹைதராபாத் எஃப்சி அணியில் பெரும்பாலும் புதுமுகங்கள் என்றாலும், ஐஎஸ்எல் போட்டிகளில் மார்சலின்ஹோ மற்றும் மார்கோ ஸ்டான்கோவிக் போன்ற நட்சத்திர வீரர்களுடன் வெற்றி பெற முடியும் என்கிறார் ஹைதராபாத் பயிற்சியாளர் பில் பிரவுன் இந்த சீசனை தங்கள் அணி சிறப்பாக தொடங்கும் என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார்.
ISL 2019-20 : ATK vs HFC match 6 preview

புனே சிட்டி அணியில் இந்திய வீரர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களையும் மார்சலின்ஹோ மற்றும் மார்கோ ஸ்டான்கோவிக் ஆகிய இரு வெளிநாட்டினரையும் என்னுடன் அழைத்து வந்துள்ளேன். மார்கோவுக்கு இந்திய விளையாட்டு குறித்த சிறந்த மனநிலையும் புரிதலும் உள்ளது. மார்சலின்ஹோ அவர்கள் விளையாடும் எந்த இடத்திலும் கால்பந்து விளையாட்டுகளை வெல்லக்கூடிய வீரர் என்கிறார் பிரவுன்.

ISL 2019-20 : ATK vs HFC match 6 preview

ஜமைக்காவின் கில்ஸ் பார்ன்ஸ் மற்றும் பிரேசிலின் போபோ போன்ற வீரரர்கள் உள்ளனர். ஆனாலும் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) அவருக்கு வழங்கிய தடை காரணமாக ஸ்பெயினின் மிட்பீல்டர் நெஸ்டர் கோர்டிலோ டிசம்பர் பிற்பகுதி வரை விளையாட மாட்டார்.

தற்போது பிரவுனின் வீரர்கள் தங்கள் மேலாளரின் நம்பிக்கையை வெற்றியாக்குவார்களா? அல்லது ஏமாற்றத்தைத்தான் தருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Photos Courtesy : ISL Media

Story first published: Friday, October 25, 2019, 10:32 [IST]
Other articles published on Oct 25, 2019
English summary
ISL 2019-20 : ATK vs HFC match 6 preview. ATK facing the new club Hyderabad FC.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+