Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் போட்டியிலேயே மரண அடி வாங்கிய ஹைதராபாத் அணி.. கோல் மழை பொழிந்து பந்தாடிய ஏடிகே!

கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஏடிகே அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 6ஆம் நாள் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுபபாரதி கிரிரங்கன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஏடிகே அணியும் ஹைதராபாத் எஃப்சி அணியும் மோதின.

ISL 2019-20 : ATK vs Hyderabad FC match 6 report

இந்த சீசனில் அறிமுகமாகும் ஹைதராபாத் அணி தன் முதல் ஐஎஸ்எல் போட்டியில் ஆடியது.

டாஸ் வென்ற ஹைதராபாத் எஃப்சி அணி ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆட்டத்தின் 25 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் வில்லியம்ஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து 27 நிமிடத்தில் அதே அணியின் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2019-20 : ATK vs Hyderabad FC match 6 report

42 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் சாகிலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 44 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் வில்லியம்ஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இதனைத் தொடர்ந்து ஏடிகே அணி முதல் பாதி ஆட்டத்தில் 3 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ISL 2019-20 : ATK vs Hyderabad FC match 6 report

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் 46 ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 57 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத்தின் ராபினுக்கு மஞ்சள் காண்பிக்கப்பட்டது. 70 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜாவிட் வெளியேற்றப்பட்டு எடு கார்சியா களம் இறக்கப்பட்டார். 81 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் சூசைக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : ATK vs Hyderabad FC match 6 report

88 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் எடு கார்சியா அற்புதமாக கோல் அடித்து அணியின் கோல் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தினார். இதைத் தொடர்ந்து 90 ஆவது நிமிடத்தில் எடு கார்சியா மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ISL 2019-20 : ATK vs Hyderabad FC match 6 report

இதைத் தொடர்ந்து ஏடிகே அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி பிரமாண்ட வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, October 26, 2019, 10:20 [IST]
Other articles published on Oct 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+