Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மூன்று கோல் அடித்து மிரட்டிய ஏடிகே.. ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி தோல்வி!

கொல்கத்தா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஏடிகே - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஏடிகே அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 19 ஆம் நாள் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாராதி சிரிங்கன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ISL 2019-20 : ATK vs Jamshedpur FC Match no.19 report

இதில் ஏடிகே - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் அதிரடியாக மோதின. டாஸ் வென்ற ஏடிகே - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் ஏடிகே அணி வலது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

ஆட்டத்தின் 3 ஆவது நிமிடத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் பெரேராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் ஆக்ரோஷத்துடன் ஆடின.

ISL 2019-20 : ATK vs Jamshedpur FC Match no.19 report

31 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் பிரித்தமிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 38 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 42 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் ஃபாரூக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டதின் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து 0 - 0 என் கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

ISL 2019-20 : ATK vs Jamshedpur FC Match no.19 report

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பகுதி தொடங்கியது. ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கிருஷ்ணா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 62 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

67 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 69 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி திரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 70 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் சுப்ரதாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : ATK vs Jamshedpur FC Match no.19 reportISL 2019-20 : ATK vs Jamshedpur FC Match no.19 report

அதே 70 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கிருஷ்ணா கோல் அடித்து அசத்தினார். 75 மற்றும் 80 ஆவது நிமிடங்களில் ஏடிகே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

பின்னர் ஆட்டத்தின் 85 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கேஸ்டல் ஒரு கோல் அடித்து அசத்தினார்

ISL 2019-20 : ATK vs Jamshedpur FC Match no.19 report

இதைத் தொடர்ந்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 90 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் எடு கார்சியா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து ஏடிகே அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.

Story first published: Sunday, November 10, 2019, 10:21 [IST]
Other articles published on Nov 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+