Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : தெறிக்கவிட்ட கேரளா பிளாஸ்டர்ஸ்.. ஏடிகே அணியை வீழ்த்தி அபார வெற்றி!!

கொல்கத்தா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஏடிகே அணி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 58 ஆம் நாள் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யூபா பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஏடிகே எஃசி அணி வலது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : ATK vs Kerala Blasters FC match 58 report

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஆர்கியூஸ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜாவிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஏடிகே அணி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் கோல் எதுவும் அடிக்காததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 64 மற்றும் 65 ஆவது நிமிடங்களில் ஏடிகே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 70 ஆவது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் நர்சாரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

பின்னர் 83 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 90 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் பிரசாந்த்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. மேலும் அதே 90 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் டிராபாரோவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் 1 - 0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, ஏடிகே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Monday, January 13, 2020, 19:24 [IST]
Other articles published on Jan 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+