For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடைசி நிமிடத்தில் மாறி மாறி கோல் அடித்த ஏடிகே - மும்பை.. பரபரப்பாக நடந்த ஐஎஸ்எல் கால்பந்து போட்டி!

கொல்கத்தா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஏடிகே - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரண்டு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. இதையடுத்து இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 28 ஆம் நாள் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுபபாரதி கிரிரங்கன் மைதானத்தில் ஏடிகே - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது.

ISL 2019-20 : ATK vs Mumbai City FC match no.28 report

இதில் டாஸ் வென்ற மும்பை சிட்டி அணி இடது புறம் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சுபாசிசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 38 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் சூசைராஜ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார் இதைத் தொடர்ந்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் முதல் பாதி முடிவுக்கு வந்தது. முதல் பாதியில் ஏடிகே அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : ATK vs Mumbai City FC match no.28 report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 60 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

62 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் பிரதிக் ஒரு கோல் அடித்து அசத்தினர். 78 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டது. 81 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அனாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 87 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 89 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் அனாக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 90 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.

ISL 2019-20 : ATK vs Mumbai City FC match no.28 report

90 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் அனாக் ஒரு கோல் அடித்தார். அதே நிமிடத்தில் ஏடிகே அணியின் கிருஷ்ணா கோல் அடித்து அசத்தினார்.

இரண்டு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. இதையடுத்து ஏடிகே - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்தது.

Story first published: Sunday, December 1, 2019, 13:04 [IST]
Other articles published on Dec 1, 2019
English summary
ISL 2019-20 : ATK vs Mumbai City FC match no.28 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+