For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019-20 : பலம் கொண்ட ஏடிகே அணியை சந்திக்கும் ஒடிசா.. வெற்றி யாருக்கு? பரபர மோதல்!

கொல்கத்தா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஏடிகே எஃப்சி மற்றும் ஒடிசா எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெறுகிறது. ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 77வது நாள் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா யுப பாரதி கிரிரங்க‌ன் மைதானத்தில் நடக்கிறது.

எஃப்சி கோவாவை விட மூன்று புள்ளிகள் குறைவாக பெற்று தற்போது பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஏடிகே, முதலிடத்தை பெற சனியன்று ஒடிசா எஃப்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்னும் நிலையில் உள்ளது. சொந்த மண்ணில் எப்போதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ஆண்டானியோ ஹபாஸ் தலைமையிலான ஏடிகே, ஒடிசா எஃப்சியை தோற்கடிக்க தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கும்.

ISL 2019-20 : ATK vs OFC match 77 preview

"வெற்றி மட்டுமே எங்களுடைய குறிக்கோள். மற்ற எதைப் பற்றியும் நாங்கள் கவலைப் படுவதில்லை. எங்களின் 100% உழைப்பை நாங்கள் ஒடிசா எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் வழங்குவோம்," என்று முழு நம்பிக்கையுடன் சொல்கிறார் ஹபாஸ்.

காயம்பட்டதிற்கு பின் திரும்பியுள்ள டேவிட் வில்லியம்ஸ், நட்சத்திர ஆட்டக்காரராக உள்ள ராய் கிருஷ்ணா மற்றும் சிறப்பான பங்களிப்பை அளித்து கொண்டிருக்கும் எடு கார்சியா ஆகியோர் அணியில் உள்ளது ஹபாசுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.

ISL 2019-20 : ATK vs OFC match 77 preview

தற்போது ஆறாவது இடத்திலுள்ள ஜோஸப் கொம்பாவ் தலைமையிலான ஒடிசா எஃப்சி, டாப் நான்கு அணிகளில் ஒன்றாக இடம் பெற கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அரிடென் சண்டானா காயத்தின் காரணமாக வெளியேறிய பிறகு, ஒடிசா அணி பெங்களூரு எஃப்சி அணியிடம் இருந்து மானுவல் ஒன்வுவை கடனாக பெற்றுள்ளது. அவரும் ஒடிசா அணியை ஏமாற்றாமல் எஃப்சி கோவா அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 2 கோல்களை அடித்தார்.

ISL 2019-20 : ATK vs OFC match 77 preview

இடைநீக்கத்திற்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள ஷுபம் சாரங்கி கொம்பாவுக்கு நம்பிக்கை அளிக்கிறார். "இது எங்களுக்கு இறுதிப் போட்டி அல்ல. இந்த லீக்கை பொருத்தவரை அணிகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. கவனத்துடன் விளையாடினால் அனைத்து மேட்சுகளை கூட ஜெயிக்க முடியும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்," என்கிறார் கொம்பாவ்.

மேலும் பேசிய அவர், "இந்த ஆண்டு எங்களுடைய விளையாட்டு மிகவும் சிறப்பாக உள்ளது. அணிகளிலேயே இளமையானவர்களில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம். சிறப்பாக விளையாடி திறமையான வீரர்களையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். தகுதி சுற்றில் இடம் பெறாமல் போனாலும் இதுதான் என்னுடைய கருத்து," என அடித்துச் சொல்கிறார்.

கொல்கத்தாவில் வெல்லப் போவது ஏடிகே எஃப்சியா, அல்லது ஒடிசா எஃப்சியா?

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, February 8, 2020, 18:32 [IST]
Other articles published on Feb 8, 2020
English summary
ISL 2019-20 : ATK vs Odisha FC match 77 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+