Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : கோவா அணியுடன் கடும் மோதல்.. போராடி வென்றது பெங்களூரு அணி!

பெங்களூரு : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி - கோவா எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் பெங்களூரு எஃப்சி அணி கோவா அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 50 ஆம் நாள் ஆட்டம் பெங்களூரில் உள்ள ஸ்ரீகாண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற எஃப்சி கோவா அணி முதல் பாதி ஆட்டத்தை வலது புறமிருந்து தொடங்கியது.

ISL 2019-20 : Bengaluru FC vs FC Goa match 50 report

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இரு அணிகளுமே கடுமையாக மோதின. ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் பர்த்தலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முதல் பாதியின் இறுதி வரை இரு தரப்பினரும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் 0 - 0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு - கோவா அணிகள் சமநிலை பெற்றன.

ISL 2019-20 : Bengaluru FC vs FC Goa match 50 report

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 54 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஜுனனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 59 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷேத்ரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

61 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பௌமாஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். 78 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Bengaluru FC vs FC Goa match 50 report

79 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 84 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷேத்ரி மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

85 மற்றும் 89 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி கோவா அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது

ISL 2019-20 : Bengaluru FC vs FC Goa match 50 report
Story first published: Saturday, January 4, 2020, 19:50 [IST]
Other articles published on Jan 4, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+