For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத் எஃப்சியை வெல்லுமா பெங்களூரு எஃப்சி? முதலிடத்தை பிடிக்க கடும் போட்டி!

பெங்களூரு : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் முதலிடத்தைப் பெற மும்முரமாக உள்ள பெங்களூரு எஃப்சி அணி தனது சொந்த மண்ணில் உள்ள ஸ்ரீ கண்டிவீரா அரங்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை நேருக்கு நேர் சந்திக்கிறது.

வியாழனன்று நடைபெற உள்ள போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம், எஃப்சி கோவா மற்றும் ஏடிகே அணிகளை முந்தி பெங்களூரு எஃப்சி முதலிடத்தில் நீடிக்க முடியும். சொந்த மண்ணில் கடந்த மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள பெங்களூரு எஃப்சி, கண்டிவீரா அரங்கில் தனது மொத்த திறமையையும் காட்டி உள்ளது.

ISL 2019-20 : Bengaluru FC vs Hyderabad FC match 70 preview

பெங்களூரு எஃப்சி அணியின் கோச் கார்லஸ் குட்ராட் கூறுகையில், "எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. எவ்வளவு புள்ளிகள் பெற முடியுமோ அவ்வளவு புள்ளிகளைப் பெற நாங்கள் உழைப்போம். கோவா மற்றும் ஏடிகே அணிகளை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை," என்கிறார்.

கடந்த ஆட்டங்களில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ள பெங்களூரு எஃப்சி அணியின் டேஷோன் பிரவுன், இந்த ஆட்டத்திலும் நம்பிக்கை தரும் நாயகனாக இருக்கிறார். சுனில் சேத்ரியும் பெங்களூரு அணிக்கு பக்கபலமாக இருப்பார் என நம்பப்படுகிறது. அதோடு ஸ்பெயின் நாட்டு வீரர் நிலி பெர்டாமோவை பெங்களூரு தனது அணியில் சேர்த்திருப்பதால் அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ISL 2019-20 : Bengaluru FC vs Hyderabad FC match 70 preview

குட்ராட் மேலும் கூறுகையில், "அவர்களது ஆட்ட முறையை மாற்றி தற்போது ஹைதராபாத் அணி சற்று வித்தியாசமாக விளையாடுகிறார்கள். தங்களை நிரூபிக்க அவர்கள் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அந்த அணியின் கோச்சும் வீரர்களும் எங்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்," என்கிறார்.

மும்பை சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்ற ஹைதராபாத் எஃப்சி, புது கோச் ஜேவியர் லோபஸ் தலைமையில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள தயாராகவே உள்ளது.

ISL 2019-20 : Bengaluru FC vs Hyderabad FC match 70 preview

நம்பிக்கையுடன் உள்ள ஜேவியர் லோபஸ், "எங்கள் அணி நன்றாக முன்னேறி உள்ளது. இளம் வீரர்கள் ஆட்டத்தின் தத்துவத்தை புரிந்து வைத்துள்ளார்கள். ஒரே குறிக்கோளுடன் விளையாட அவர்கள் தயாராக உள்ளார்கள். பெங்களூரு அணியை வெல்ல நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வோம்," என்கிறார்.

மார்சிலோனா மற்றும் போபோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பெங்களூருவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க முடியும். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டநாயகனாக திகழ்ந்த அடில் கானும் ஹைதராபாத்துக்கு வலு சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, January 30, 2020, 19:21 [IST]
Other articles published on Jan 30, 2020
English summary
ISL 2019-20 : Bengaluru FC vs Hyderabad FC match 70 preview.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+