Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : ரொம்ப ஈஸி.. ஹைதராபாத் அணியை ஊதித் தள்ளிய பெங்களூரு!

பெங்களூரு : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெங்களூரு எஃப்சி மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 70வது நாள் ஆட்டம் பெங்களூருவில் உள்ள உள்ள ஸ்ரீ கண்டிவீரா அரங்கில் நடைபெற்றது. சொந்த மண்ணில் கடந்த மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ள பெங்களூரு எஃப்சி, இந்த சீசனில் டாப் 3 அணிகளில் ஒன்றாக உள்ளது.

ISL 2019-20 : Bengaluru FC vs Hyderabad FC match 70 report

எனவே, அது ஹைதராபாத் எஃப்சியை எளிதில் வெற்றி பெறும் என்றே ஆட்டம் தொடங்குவதற்கு முன்பிருந்தே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மும்பை சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்ற ஹைதராபாத் எஃப்சி, புது கோச் ஜேவியர் லோபஸ் தலைமையில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள தயாராகவே இருந்தது.

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது. சரியாக 7வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நிஷு ஒரு கோல் அடித்து ரசிகர்களின் பலத்த ஆரவாரத்திற்கிடையே தனது அணியின் கணக்கை தொடங்கி வைத்தார்.

ISL 2019-20 : Bengaluru FC vs Hyderabad FC match 70 report

25வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நிஷுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 28வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் கப்ராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 45 வது நிமிடத்தில் இரண்டு நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணியின் பார்ணசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெங்களூரு எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியவுடன் 46வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டிமாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 53வது நிமிடத்தில் பெங்களூரு அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

59வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் யாசிரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 64வது நிமிடத்தில் பெங்களூரு அணியிலும், 65வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியிலும் கோல்களை குறி வைத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

78வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஜூனானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 79வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 87வது நிமிடத்தில் பெங்களூரு அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது.

கூடுதலாக நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில், 94வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் கில்கள்ளோனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் கோல்கள் அடிக்கப்படாத நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Friday, January 31, 2020, 20:03 [IST]
Other articles published on Jan 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+