For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

பெங்களூரு அணி அபார வெற்றி.. 2 கோல் அடித்து ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது!

பெங்களூரு : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெங்களூரு எஃப்சி அணி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே ஆன மோதல் நடைபெற்றது.

இதில் பெங்களூரு எஃப்சி அணி ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ISL 2019-20 : Bengaluru FC vs Jamshedpur FC match 55 report

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 55 ஆம் நாள் ஆட்டம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீகாண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதல் பாதி ஆட்டத்தைத் இடது புறமிருந்து தொடங்கியது.

ஆட்டத்தின் 8 ஆவது நிமிடத்திலேயே பெங்களூரு அணியின் பர்த்தலு அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 27ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மான்டிராய்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

45 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் காப்ராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் முதல் பாதி முடிவில் பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : Bengaluru FC vs Jamshedpur FC match 55 report

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 46 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் நரேந்தருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 50 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

63 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷேத்ரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 66 மற்றும் 78 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதே போல் 86 மற்றும் 87 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இறுதியில் பெங்களூரு எஃப்சி அணி ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Friday, January 10, 2020, 23:20 [IST]
Other articles published on Jan 10, 2020
English summary
ISL 2019-20 : Bengaluru FC vs Jamshedpur FC match 55 report
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X