Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : கோட்டை விட்ட கேரளா பிளாஸ்டர்ஸ்.. பெங்களூரு அணி அபார வெற்றி!!

பெங்களூரு : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது.

ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை தோற்கடித்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 21ஆம் நாள் ஆட்டம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வலது புறமிருந்து ஆட்டத்தை தொடங்கியது. தொடக்கத்தில் கேரளா அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். பெங்களூரு வீரர்கள் சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்

ISL 2019-20 : Bengaluru FC vs Kerala Blasters FC match no.21 report

ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் கேரள அணியின் ராகிப்புக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

முதல் 45 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியிள் காப்ராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 54 ஆவது நிமிடத்தில் கேரளாவின் காக்குவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Bengaluru FC vs Kerala Blasters FC match no.21 report

ஆட்டத்தின் 55 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் சேத்ரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 63 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 66 ஆவது நிமிடத்தில் கேரளாவின் மெஸ்ஸிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

70 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 72 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் சாகலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 77 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Bengaluru FC vs Kerala Blasters FC match no.21 report

இதே போல் 90 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பின்னர் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முடிவில் பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை தோற்கடித்தது.

ISL 2019-20 : Bengaluru FC vs Kerala Blasters FC match no.21 report
Story first published: Sunday, November 24, 2019, 11:39 [IST]
Other articles published on Nov 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+