Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : மும்பை அணி த்ரில் வெற்றி.. பெங்களூரு எஃப்சியை வீழ்த்தியது!

பெங்களூரு : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் மும்பை சிட்டி அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 39 ஆம் நாள் ஆட்டம் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ காண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Bengaluru FC vs Mumbai City FC match no.39 result

தொடக்கம் முதலே இரு அணிகளும் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்தன. ஆட்டம் பயங்கரமாக சூடு பிடித்தது. ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் சுபாஷிஷ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 21 ஆவது நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் சோகுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

34 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் போர்ஜசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் ஆஷிக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. மும்பையின் அமரீந்தருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் கூடுதலாக மூன்று நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது மும்பை அணியின் செர்மிட்டிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மும்பை அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ISL 2019-20 : Bengaluru FC vs Mumbai City FC match no.39 result

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டத்தின் 58 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் கெர்ஜிக் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

பின்னர் 63 மற்றும் 72 ஆவது நிமிடங்களில் இரண்டு அணிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது. 73 ஆவது நிமிடத்தில் மும்பை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 77 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் டிகோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதைத் தொடர்ந்து 81 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலுமே மாற்றம் செய்யப்பட்டது. 87 அவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் லிண்டோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

89 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷேத்ரி ஒரு கோல் அடித்தார். 90 ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ஷர்தக்கிற்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Bengaluru FC vs Mumbai City FC match no.39 result

இதையடுத்து கூடுதலாக நான்கு நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது பெங்களூரு அணியின் ரஃபேலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் மும்பை அணியின் போர்ஜல் மீண்டும் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து மும்பை சிட்டி அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Monday, December 16, 2019, 12:41 [IST]
Other articles published on Dec 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+