For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெற்றியும் கிடையாது.. தோல்வியும் கிடையாது.. பெங்களூரு – நார்த் ஈஸ்ட் போட்டி சமனில் முடிந்தது!

பெங்களூரு : பெங்களூரு - நார்த் ஈஸ்ட் அணிகள் இடையே நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி வெற்றி - தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

6ஆவது ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் பெங்களூரு ஸ்ரீ காண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நடப்புச் சாம்பியனான பெங்களூரு எஃப்சி அணியும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியும் மோதின.

ISL 2019-20 : Bengaluru FC vs North East united FC match 2 result

டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் அணி இடது புறமிருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. பெங்களூரு அணியின் சுனில் ஷேத்ரியும் உதாந்தா சிங்கும் அற்புதமாக விளையாடினர். ஆனாலும் அவர்களை சமாளித்து நார்த் ஈஸ்ட் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

பெங்களூரு அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடினர். ஆட்டத்தின் 27 ஆவது நிமிடத்தில் ரஃபேல் அடித்த பந்தை உதாந்தா சிங் கோலாக மாற்ற முயன்றார். ஆனால் அது மிஸ் கோலாக மாறியது.

ISL 2019-20 : Bengaluru FC vs North East united FC match 2 result

இரு அணி வீரர்களுமே மிகச் சிறப்பாக விளையாடினர். ஆனால் ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளுமே கோல் எதுவுமே அடிக்கவில்லை.

இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் 0 - 0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளுமே சமநிலையில் இருந்தன.

ISL 2019-20 : Bengaluru FC vs North East united FC match 2 result

இதையடுத்து 2 ஆவது பாதி ஆட்டம் தொடங்கியது. இந்த ஆட்டமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணி வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடினர். ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் ராய்க்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.

73 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இதே போல் 81 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் பெங்களூரு மற்றும் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ISL 2019-20 : Bengaluru FC vs North East united FC match 2 result

ஆட்டத்தின் 90 ஆவது நிமிடம் வரை இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அந்த 4 நிமிடத்திலும் இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை.

ISL 2019-20 : Bengaluru FC vs North East united FC match 2 result

இதையடுத்து பெங்களூரு மற்றும் நார்த் ஈஸ்ட் அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன. இதனைத் தொடர்ந்து ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி சமனில் முடிந்தது.

Photos Courtesy : ISL Media

Story first published: Tuesday, October 22, 2019, 10:18 [IST]
Other articles published on Oct 22, 2019
English summary
ISL 2019-20 : Bengaluru FC vs North East united FC match 2 result. It’s a goalless draw.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+