For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ISL 2019-20 : மீண்டும் மண்ணைக் கவ்விய சென்னையின் எஃப்சி.. ஏடிகே அணி அபார வெற்றி!!

சென்னை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி மற்றும் ஏடிகே அணிகளிடையே மோதல் நடைபெற்றது. இதில் ஏடிகே அணி சென்னையின் எஃப்சி அணியை 1 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 11 ஆம் நாள் ஆட்டம் சென்னையில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி மற்றும் ஏடிகே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஏடிகே அணி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match no. 11 report

ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணிக்கு கோல் அடிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நழுவிப்போனது.

இதே போல் ஆட்டத்தின் 9 மற்றும் 12 ஆவது நிமிடங்களில் ஏடிகே அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டு வாய்ப்புகளும் நழுவிப்போனது. இரு அணிகளுமே கடுமையாக மோதின.

ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match no. 11 report

இறுதியில் கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் எதுவும் அடிக்கவில்லை.

ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match no. 11 report

இதையடுத்து சென்னையின் எஃப்சி மற்றும் ஏடிகே அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இடைவேளைக்கும் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஆட்டத்தின் 48 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் வில்லியம்ஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match no. 11 report

58 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதே போல் ஆட்டத்தின் 69 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியில் சூசை வெளியேற்றப்பட்டு ரானே களம் இறக்கப்பட்டார்.

ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match no. 11 report

73 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 80 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியில் மீண்டும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் இரு அணிகளுக்கும் கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match no. 11 report

இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஏடிகே அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எஃப்சி அணியை தோற்கடித்தது.

Story first published: Thursday, October 31, 2019, 10:44 [IST]
Other articles published on Oct 31, 2019
English summary
ISL 2019-20 : Chennaiyin FC vs ATK match no. 11 report. CFC once again lost the match in this season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X