For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019-20 : விடாப்பிடியாக மோதிய பெங்களூரு - சென்னை அணிகள்.. கோல் அடிக்காமல் டிராவான போட்டி!

சென்னை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆறாவது சீசன் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 78வது நாள் ஆட்டம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இரண்டும் தென்னிந்தியாவின் முக்கிய அணிகள் என்பதாலும், போட்டி ஞாயிறன்று சென்னையில் நடைபெற்றதாலும், பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

ISL 2019-20 : Chennaiyin FC vs Bengaluru FC match 78 report

பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த‌ பெங்களூரு எஃப்சி, கோவா மற்றும் ஏடிகே ஆகிய அணிகளை முந்தி முதலிடத்துக்கு வர முனைப்பாக இருந்தது. ஐந்தாம் இடத்தில் இருந்த‌ சென்னையின் எஃப்சியோ, எப்படியாவது முன்னேறி முதல் மூன்று அணிகளில் ஒன்றாக வர வேண்டுமென்பதில் குறியாக இருந்த‌து.

டாஸ் வென்ற பெங்களூரு எஃப்சி அணி முதல் பாதி ஆட்டத்தை தொடங்கியது. இரண்டு அணிகளின் கடும் முயற்சிகளின் நடுவிலும் ஒரு கோல் கூடாத விழாத நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

ISL 2019-20 : Chennaiyin FC vs Bengaluru FC match 78 report

ஐம்பத்தி இரண்டாம் நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது. அதே நிமிடத்தில் அந்த அணியின் ஜுவனானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 61வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்த நிலையில், 67வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி தனது அணியில் ஒரு மாற்றத்தை செய்தது.

அறுபத்தி எட்டாம் நிமிடத்தில் பெங்களூரு அணியின் செர்ரானுக்கும், 72வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சியின் தோய்க்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 75வது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சியின் நிலிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 85வது நிமிடத்தில் அந்த அணி ஒரு மாற்றத்தை செய்தது. இவ்வாறு, மாற்றங்களும் மஞ்சள் அட்டைகளும் நிகழ்ந்தாலும், எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில் ரசிகர்கள் சோர்வடைந்தனர்.

88வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் தோய்க்கு இரண்டாம் முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 89வது நிமிடத்தில் அந்த அணி ஒரு மாற்றத்தை செய்தது. 90வது நிமிடம் வரை எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில், 5 கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. பின்னர் யாரும் ஒரு கோல் கூட அடிக்காமலேயே ஆட்டம் சமனில் முடிந்தது.

Photos Courtesy : ISL Media

Story first published: Monday, February 10, 2020, 18:27 [IST]
Other articles published on Feb 10, 2020
English summary
ISL 2019-20 : Chennaiyin FC vs Bengaluru FC match 78 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+