Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாவ்.. மொத்தம் 7 கோல்.. போராடி தோற்ற சென்னை.. வெற்றி பெற்றது கோவா!

சென்னை : ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் கோவா அணி 4 - 3 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 46 ஆம் நாள் ஆட்டம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கோவா அணி முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Chennaiyin FC vs FC Goa match 46 result and highlights

ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே கோவா அணிக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பு நழுவிப் போனது.

ஆட்டத்தின் 26 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ரோட்ரிஸ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதே 26 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஜெகோவா அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பிராண்டன் ஒரு கோல் அடித்து அசத்தினார். 44 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபாலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

45 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பௌமஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் கோவா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் ஆட்டத்தின் 2 ஆவது பாதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 57 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் செம்ப்ரி ஒரு கோல் அடித்தார்.

59 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிரிவெல்லோ ஒரு கோல் அடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 63 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் கோரா அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

65 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கோயனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 70 மற்றும் 75 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்பட்டது.

இதே போல் 76 மற்றும் 77 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலுமே மாற்றம் செய்யப்பட்டது. 79 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் நவாசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 82 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பெனாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

90 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிரிவெல்லாரோ ஒரு கோல் அடித்து அசத்தினார். அதே 90 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் 3 வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. முடிவில் கோவா அணி 4 - 3 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Friday, December 27, 2019, 20:17 [IST]
Other articles published on Dec 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+