For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த போட்டியிலாவது ஜெயிப்பாங்களா? பரிதாப நிலையில் சென்னை அணி.. ஹைதராபாத் அணியுடன் மோதல்!

சென்னை : நவம்பர் 24 அன்று சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஹைதராபாத் எஃப்சிக்கு எதிராக சென்னையின் எஃப்சி அணி தனது முதல் கோலை அடிக்க ஆர்வமாக உள்ளது.

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் இந்த சீசனினல் 360 நிமிடங்களுக்கும் மேலாக கால்பந்து விளையாடியும் ஜான் கிரிகோரியின் சென்னையின் அணி சோபிக்கவில்லை. நான்கு ஆட்டங்களில் ஒரு டிராவுடன், சென்னை அணி புள்ளிப் பட்டியிலில் கீழே உள்ளது. ஹைதராபாத் நான்கு போட்டிகளில் மூன்று புள்ளிகளுடன் அவர்களுக்கு மேலே உள்ளது.

ISL 2019-20 : Chennaiyin FC vs Hyderabad FC match no.23 preview

கிரிகோரி தனது மனதில் நினைப்பது என்னவென்றால் எதிரி அணியினர் டிஃபென்ஸ் சைடில் சாதனை புரிந்துள்ளனர். இருப்பினும், இடைவேளைக்கு சற்று முன்பு பெங்களூரு எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

"எங்கள் சொந்த மண்ணில் நடந்த போட்டிகளில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம். மும்பை மற்றும் ஏ.டி.கே.க்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். எனவே, பெங்களூரு எஃப்சி விளையாட்டுக்குச் செல்வதில் நான் நிம்மதியாக இருந்தேன், ஆனால் அவர்களது திறமையான விளையாட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக இது எங்கள் அணி வீரர்களுக்கு எதிரானது. நாங்கள் எங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்த எதுவும் கொடுக்கவில்லை" என்றார் கிரிகோரி.

ISL 2019-20 : Chennaiyin FC vs Hyderabad FC match no.23 preview

சென்னையின் முன்னணி வீரர்களான ஆண்ட்ரே ஸ்கெம்ப்ரி மற்றும் நெரிஜஸ் வால்ஸ்கிஸ் - கில்ட்-எட்ஜ் ஆகியோர் வாய்ப்புகளை இழந்துள்ளனர். ரஃபேல் கிரிவெல்லாரோ போன்றவர்கள் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர்.

நீண்ட சர்வதேச இடைவெளி நேரத்தை தங்களை மறுசீரமைப்பதற்கு உதவும் வகையில் சிறிது நேரம் கிடைத்திருக்கிறது என்று கிரிகோரி நம்புகிறார். சென்னையின் எஃப்சி அணிக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், ஒவ்வொரு வீரரும் தேர்வு செய்வதற்கு நேரம் கிடைத்திருக்கிறது.

தொடக்க நான்கு ஆட்டங்களில் ஹைதராபாத் அணி சிறந்த வீரர்கள் இல்லாமல் போராடியது மற்றும் கேரள பிளாஸ்டர்ஸுக்கு எதிராக ஒரு வெற்றியை மட்டுமே பெற முடிந்தது, ஜாம்ஷெட்பூர் எஃப்சி, ஏடிகே மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆகியவற்றுக்கு எதிராக தோல்விகளை சந்தித்தது.

ISL 2019-20 : Chennaiyin FC vs Hyderabad FC match no.23 preview

ஹைதராபாத் தலைமை பயிற்சியாளர் பில் பிரவுனைப் பொறுத்தவரை, அவர்கள் காயமடைந்த வீரர்கள் அனைவருமே குணமடைவதை அவர்கள் கண்டிருக்கிறார்கள், இது சென்னையின் எஃப்சிக்கு எதிராக தனது வலுவான லெவன் அணியை களமிறக்க அவர் அனுமதிப்பார். ஓமனுக்கு எதிரான இந்தியாவின் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆட்டமிழந்த ஆதில் கானை தவிர, மீதமுள்ள முக்கிய வீரர்கள் அனைவரும் திரும்பி வந்துள்ளனர்.

சென்னைன் எஃப்சி அணி சிறந்த மனநிலையில் இல்லை என்றாலும், பிரவுன் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கிறார்.

ISL 2019-20 : Chennaiyin FC vs Hyderabad FC match no.23 preview

"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் எஃப்சி அணி பட்டத்தை வென்றது. இப்போது அவர் (கிரிகோரி) ஒரு கூண்டுக்குள் விலங்கு போல் உள்ளார். அதுவும் காயமடைந்த விலங்கு போன்றவர். கடின உழைப்புக்கான வெகுமதியை அவர் பெறவில்லை. அவர்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறார்கள். இது பயிற்சியின் கடினமான பகுதியாகும், இது நிர்வாகத்தின் கடினமான பகுதியாகும். அவர் என்னைப் போன்ற அதே பிரச்சினைகளையும் சந்தித்துள்ளார். இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களின் சரியான கலவையைத் தேர்ந்தெடுப்பார்" என்று பிரவுன் கூறினார்.

ஹைதராபாத் அணி இந்தப் போட்டியில் ஸ்டார் ஃபார்வர்ட் பிளேயரான மார்சலின்ஹோவை நம்பும். ஆனால் மிக முக்கியமாக, பிரவுன் தனது அணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகளில் புள்ளி அட்டவணையில் கீழே உள்ள இரு தரப்பினரும் தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள மூன்று புள்ளிகள் எடுக்க வேண்டும்.

Story first published: Sunday, November 24, 2019, 20:52 [IST]
Other articles published on Nov 24, 2019
English summary
ISL 2019-20 : Chennaiyin FC vs Hyderabad FC match no.23 preview
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+