For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோல் மழை பொழிந்த சென்னை.. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி!

சென்னை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 41 ஆம் நாள் ஆட்டம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேரளா பிளாஸ்டர்ஸ் அணி முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : Chennaiyin FC vs Kerala Blasters FC match 42 report

ஆட்டத்தின் 4 ஆவது நிமிடத்தில் சென்னை அணி செம்ப்ரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஒபிச்சி ஒரு கோல் அடித்தார்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் செஞ்சிட் ஒரு கோல் அடித்தார். 37 ஆவது நிமிடத்தில் கேரள அணியின் மெஸ்ஸிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் வால்ஸ்கிஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். 44 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ஜெர்மனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Chennaiyin FC vs Kerala Blasters FC match 42 report

இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் சென்னையின் எஃப்சி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 57 மற்றும் 63 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. பிள்ளர் 72 மற்றும் 83 ஆவது நிமிடங்களில் மீண்டும் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

84 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கைத்துக்க மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 89 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது எந்த அணியும் கோலும் போடவில்லை. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் சென்னையின் எஃப்சி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Saturday, December 21, 2019, 15:31 [IST]
Other articles published on Dec 21, 2019
English summary
ISL 2019-20 : Chennaiyin FC vs Kerala Blasters FC match 42 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+