ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை!
சென்னை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் சென்னையின் எஃப்சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 60 ஆம் நாள் ஆட்டம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நார்த் ஈஸ்ட் எஃப்சி அணி இடது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ஆட்டத்தின் 13 ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு ஒரு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நழுவிப் போனது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதின.
பின்னர் கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.
இதையடுத்து ஆட்டத்தின் 2 ஆவது பாதி ஆட்டம் தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆட்டத்தின் 57 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கிரிவெல்லாரோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

59 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் வால்ஸ்கிஸ் ஒரு கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் மாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து 77 ஆவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 88 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

இரண்டாம் பாதியின் முடிவில் கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் சென்னையின் எஃப்சி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Photos Courtesy : ISL Media


Click it and Unblock the Notifications