சென்னை : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி மற்றும் ஒடிசா எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளுமே தலா இரண்டு கோல்கள் போட்டதையடுத்து ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 26 ஆம் நாள் ஆட்டம் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் சென்னையின் எஃப்சி மற்றும் ஒடிசா எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஒடிசா அணி ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் கடுமையாக மோதின. ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் வினித்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து கூடுதலாக 1 நிமிடம் வழங்கப்பட்டது. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் போடாததால் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சென்னை மற்றும் ஒடிசா அணிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 50 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ஜெர்மனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 50 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் ஜெர்மன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதே போல் 51 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் வால்ஸ்கிஸ் அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

பின்னர் 54 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் சிஸ்கோ ஒரு கோல் அடித்தார். 63 ஆவது நிமிடத்தில் சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 66 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் டெல்காடோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 71 ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் வால்ஸ்கிஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து 74 மற்றும் 79 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலுமே மாற்றம் செய்யப்பட்டது.
ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் ஒடிசா அணியின் அரிடேன் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து கூடுதலாக 3 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் சென்னையின் எஃப்சி மற்றும் ஒடிசா எஃப்சி அணிகள் தலா 2 கோல்கள் போட்டன. இதைத் தொடர்ந்து 2 - 2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
Photos Courtesy : ISL Media