For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ISL 2019-20 : மாறி மாறி கோல் அடித்த அணிகள்.. ஏடிகே அணியை வீழ்த்தி கோவா அதிரடி வெற்றி!

கோவா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எஃசி கோவா - ஏடிகே அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் எஃப்சி கோவா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 38 ஆம் நாள் ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஏடிகே அணி முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : FC Goa vs ATK match result

ஆட்டத்தின் 8 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் அகசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 14 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் செரிட்டனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் செனாஜுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக ஒரு நிமிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து கடைசி வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து 0 - 0 என்ற கோல் கணக்கில் எஃசி கோவா - ஏடிகே எஃப்சி அணிகள் சமநிலை பெற்றன.

ISL 2019-20 : FC Goa vs ATK match result

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபால் ஒரு கோல் அடித்து அசத்தினார். 63 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் ஜோபி ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் கோரோ ஒரு கோல் அடித்தார். 72 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் மாற்றம் செய்யப்பட்டது.

ISL 2019-20 : FC Goa vs ATK match result

பின்னர் ஆட்டத்தின் 75 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஜெகோவாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 77 மற்றும் 84 ஆவது நிமிடங்களில் ஏடிகே அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

86 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் கோவா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.பின்னர் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து எஃப்சி கோவா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ஏடிகே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Story first published: Sunday, December 15, 2019, 19:10 [IST]
Other articles published on Dec 15, 2019
English summary
ISL 2019-20 : FC Goa vs ATK match report and highlights.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+