Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : கோவா – பெங்களூரு அணிகள் மோதல்.. ஆளுக்கு ஒரு கோல்.. டிராவில் முடிந்த போட்டி!

கோவா: ஐஎஸ்எல் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகளிடையே மோதல் நடைபெற்றது. இந்தப் போட்டி 1 - 1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 9 ஆம் நாள் ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் எஃப்சி கோவா அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி ஆட்டத்தைத் தொடங்கியது.

ISL 2019-20 : FC Goa vs Bengaluru FC match 9 report

ஆட்டத்தின் முதலாவது நிமிடத்திலேயே பெங்களூரு அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியால் அதை கோலாக்க முடியவில்லை. தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதின.

ஆட்டத்தின் 45 ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து கூடுதலாக 1 நிமிடம் வழங்கப்பட்டது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடாததால் கோவா மற்றும் பெங்களூரு அணிகள் 0 - 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 55 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆட்டத்தின் 62 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் உதாந்தா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 71 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஜெஹோவாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து 71 மற்றும் 73 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. 77 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் மந்தருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 88 மற்றும் 89 ஆவது நிமிடங்களில் கோவா மற்றும் பெங்களூரு என இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து ஆட்டத்தில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது 90 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் கோரா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து கோவா மற்றும் பெங்களூரு அணிகளிடையே நடைபெற்ற ஆட்டம் 1 - 1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Photos Courtesy : ISL Media

Story first published: Wednesday, October 30, 2019, 15:56 [IST]
Other articles published on Oct 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+