Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISL 2019-20 : 4 கோல் அடித்து மிரட்டல்.. ஹைதராபாத் அணியை வீழ்த்தி கோவா அபார வெற்றி!

கோவா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் எஃப்சி கோவா மற்றும் ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் எஃப்சி கோவா அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆறாவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 74வது நாள் ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நடைபெற்றது. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த‌ செர்ஜியோ லோபெராவின் வெளியேற்றத்திற்கு பிறகு, இடைக்கால கோச்சாக நியமிக்கப்பட்ட கிளிஃபார்டு மிராண்டா தலைமையில் எஃப்சி கோவா இந்த போட்டியை சந்தித்தது.

ISL 2019-20 : FC Goa vs Hyderabad FC match 74 report

இதுவரை 15 ஆட்டங்களில் 32 கோல்களை அடித்து தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்த எஃப்சி கோவா, முதலிடத்துக்காக பெங்களூரு எஃப்சி மற்றும் ஏடிகே ஆகிய அணிகளுடன் போட்டியில் உள்ளது.

ஹைதராபாத் எஃப்சியை பொறுத்த வரை 15 ஆட்டங்களில் 6 புள்ளிகள் எடுத்துள்ள நிலையில், மோசமான அணி என்னும் பெயர் எடுப்பத்தை தடுக்க 4 புள்ளிகள் தேவைப்பட்டது. எனவே, அது கடும் பயிற்சிக்கு பின் கோவா அணியை முழு உத்வேகத்துடன் சந்தித்தது.

டாஸ் வென்ற எஃப்சி கோவா அணி வலது புறமிருந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. 19வது நிமிடத்தில் அந்த அணியின் பவ்மஸ், ரசிகர்களின் பலத்த உற்சாகத்துக்கு இடையே ஒரு கோல் அடித்தார். 24வது நிமிடத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியின் ராய்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது

முதல் பாதி முடிவுக்கு வரும் நிலையிலும் மேலும் கோல் எதுவும் விழவில்லை. பின்னர் இரண்டு கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் எஃப்சி கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், எஃப்சி கோவா அணியின் பவ்மஸ் மற்றொரு கோல் அடித்து தனது அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

இதைத்தொடர்ந்து சுதாரித்த ஹைதராபாத் எஃப்சி, தனது அணியில் 55வது நிமிடத்தில் இரண்டு முறை மாற்றங்களைச் செய்தது. 63வது நிமிடத்தில் கோவா அணியின் ஜஹோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மர்சிலெனோ தனது அணியின் முதல் கோலை அடித்தார்.

அறுபத்தி ஆறாவது நிமிடத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியின் கில்கலானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வீறு கொண்டு எழுந்த கோவா அணியின் கோரோ 68வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியின் கோல் எண்ணிக்கையை 3 ஆக உயர்த்தினார்.

எழுபத்தி ஒன்பதாவது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. 80வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியிலும் மாற்றம் செய்யப்பட்டது. 85வது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் சக்ரபர்த்திக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. 87வது நிமிடத்தில் எஃப்சி கோவா அணியின் கோரோ ஒரு கோல் அடித்தார். 89வது நிமிடத்தில் அந்த அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆட்டத்தின் இறுதி கட்டத்தில், அதாவது 90வது நிமிடத்தில், மூன்று கூடுதல் நிமிடங்கள் அளிக்கப்பட்டன. பின்னர் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில் எஃப்சி கோவா அணி, 4 - 1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Story first published: Thursday, February 6, 2020, 12:22 [IST]
Other articles published on Feb 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+