For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு கோல் அடித்து.. ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி அபார வெற்றி.. பலமான கோவா அணியை வீழ்த்தியது!

கோவா : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் இன்றைய கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஜாம்ஷெட்பூர் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 24 ஆம் நாள் ஆட்டம் கோவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் எஃப்சி கோவா - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற கோவா அணி இடது புறமிருந்து ஆட்டத்தை தொடங்கியது.

ISL 2019-20 : FC Goa vs Jamshedpur FC match 24 report

ஆட்டம் தொடங்கிய 5 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஜெகோவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அடுத்து 8 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஜிட்டுவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் கேஸ்டல் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்துக்குப் பிறகு கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அப்போது கோவா அணியின் செரிட்டனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : FC Goa vs Jamshedpur FC match 24 report

இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் 1 - 0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி முன்னிலை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 53 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் திரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : FC Goa vs Jamshedpur FC match 24 report

63 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் வினீத் வெளியேற்றப்பட்டு மொபாசிர் களம் இறக்கப்பட்டார். இதே போல் 66 ஆவது நிமிடத்தில் கோவா அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

பின்னர் 71 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் அகோஸ்டாவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 72 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஜோவாவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : FC Goa vs Jamshedpur FC match 24 report

இதைத் தொடர்ந்து 80 மற்றும் 87 ஆவது நிமிடத்தில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டன.

பின்னர் கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஜாம்ஷெட்பூர் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் எஃப்சி கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Photos Courtesy : ISL Media

Story first published: Wednesday, November 27, 2019, 18:54 [IST]
Other articles published on Nov 27, 2019
English summary
ISL 2019-20 : FC Goa vs Jamshedpur FC match 24 report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+