For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போட்டி போட்டு கோல் அடித்த ஹைதராபாத் - ஏடிகே.. டிராவில் முடிந்த பரபர போட்டி!

ஹைதராபாத் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - ஏடிகே அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் மற்றும் ஏடிகே அணிகள் 2 - 2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 43 ஆம் நாள் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அதெலட்டிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி வலது புறமிருந்து முதல் பாதி ஆட்டத்தைத் தொடங்கியது..

ISL 2019-20 : Hyderabad FC vs ATK match 43 result and highlights

தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அசத்தலாக விளையாடின. ஆட்டத்தின் 9 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் பர்னசுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கிருஷ்ணா ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ஆட்டத்தின் 39 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் போபோ ஒரு கோல் அடித்து அசத்தினார். பின்னர் கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. 45 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் சுமீத்துக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஆட்டத்தின் முதல் பாதி முடிவுக்கு வந்தது. இதில் ஹைதராபாத் மற்றும் ஏடிகே அணிகள் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன.

ISL 2019-20 : Hyderabad FC vs ATK match 43 result and highlights

இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 64 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் செனாஜுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 67 மற்றும் 69 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டன.

அடுத்து 80 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆட்டத்தின் 85 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் போபோ அற்புதமாக ஒரு கோல் அடித்தார். 87 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் ராபினுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Hyderabad FC vs ATK match 43 result and highlights

ஆட்டத்தின் 87 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 89 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் அடிலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 90 ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் கிருஷ்ணா மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஹைதராபாத் மற்றும் ஏடிகே அணிகள் தலா இரண்டு கோல்கள் அடித்ததையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.

Story first published: Sunday, December 22, 2019, 19:53 [IST]
Other articles published on Dec 22, 2019
English summary
ISL 2019-20 : Hyderabad FC vs ATK match 43 result and highlights.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+