பெங்களூரு எஃப்சி வெற்றியை தடுத்த ஹைதராபாத்.. போராடி டிரா செய்தது!

ஹைதராபாத் : ஐஎஸ்எல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஹைதராபாத் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே மோதல் நடைபெற்றது. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

6ஆவது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் 27 ஆம் நாள் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அதெலட்டிக் மைதானத்தில் ஹைதராபாத் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே நடைபெற்றது.

ISL 2019-20 : Hyderabad FC vs Bengaluru FC match 27 report

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி இடது புறம் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆட்டத்தின் 2 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சுனில் ஷேத்தரி அற்புதமாக ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 21 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் யாசிருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. பின்னர் 37 ஆவது நிமிடத்தில் பெங்களுரு அணியின் ஷெரனுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Hyderabad FC vs Bengaluru FC match 27 report

இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பின்னர் முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் பாதியில் பெங்களூரு அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 47 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் பர்த்தலுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 56 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் சாகிலுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

ISL 2019-20 : Hyderabad FC vs Bengaluru FC match 27 report

59 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் டிமோசுக்கும். 60 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் மார்சிலோனாவுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. 62 மற்றும் 74 ஆவது நிமிடத்தில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆட்டத்தின் 81 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 82 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் குருதேஜ்க்கும், 87 ஆவது நிமிடத்தில் ராபினுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

2008இல் என்னை தடை செய்யக் காரணமே கோச் கேரி கிர்ஸ்டன் தான்.. அதிர வைத்த முன்னாள் வீரர்!

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 90 ஆவது நிமிடத்தில் ஹைதராபாத் அணியின் ராபின் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். பின்னர் கூடுதலாக 4 நிமிடங்கள் தரப்பட்டது. இதையடுத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இறுதியில் பெங்களூரு அணி மற்றும் ஹைதராபாத் அணிகள் தலா ஒரு கோல் அடித்தது. இதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது.

Photos Courtesy : ISL Media

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
ISL 2019-20 : Hyderabad FC vs Bengaluru FC match 27 report.
Story first published: Saturday, November 30, 2019, 14:48 [IST]
Other articles published on Nov 30, 2019
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more